ஒவ்வொரு நாளும் அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள்  தொடர்ந்து நடைபெற்று  வருகிறது. நேற்று  முதல்வர்  எடப்பாடி  அவர்கள்,  யாரும்  எதிர்பார்க்காத விதமாக நேற்று  ஒரு  அறிவிப்பை  வெளியிட்டார்.

அதில்  மறைந்த முதல்வர்  ஜெயலலிதா வாழ்ந்த  இல்லமான  வேத இல்ல போயஸ் கார்டன் நினைவிடமாக மாற்றப்படும்  எனவும், ஜெ. மறைவு குறித்து நீதி விசாரணை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் அதிரடியாக வெளியேற்றம்

முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து, இன்று தினகரன் மற்றும் சசிகலாவின் ஆதரவாளர்களை போயஸ் கார்டனிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டு, காவல்துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

அணிகள் இணைப்பு

 EPS, OPS அணிகள் அணிகள் இணைவதற்கான அனைத்து சாத்யகூறுகள் தெளிவாக உள்ளன. இந்நிலையில்   இரண்டு  அணிகளும் இணைந்து முதல் வேலையாக பொதுக்குழு கூட்ட திட்டமிட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த  கூட்டத்தில் முக்கிய முடிவாக சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்ததை ரத்து செய்யும் தீர்மானம்  கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

இரட்டை இலை சின்னம்

சசிகலாவின்  பொதுச்செயலாளர்  பதவி நியமனம்  ரத்து செய்யப்பட்டால்,  இதற்கு முன்னதாக  தேர்தல்  ஆணையத்தால்  முடக்கப்பட்ட  அதிமுக என்ற  கட்சி பெயர், இரட்டை   இலை சின்னம்  என  அனைத்தும்  மீண்டும் கிடைத்துவிடும்  என்பது  குறிப்பிடத்தக்கது.