தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் பிரதமர் நரேத்திர மோடியை சந்திக்க உள்ளார்.
அப்போது, காவிரி மற்றும் முல்லை பெரியாறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என முடிவு செய்துள்ளார். பொதுப்பணி துறை சார்பில், அதற்கான அறிக்கைகள் மற்றம் கோப்புகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான மத்திய குழுவினர், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். இதற்கான அறிக்கை மத்திய அரசிடம் ஒப்படைத்த பின்னர், வறட்சி நிவாரண நிதி கிடைக்கும்.
ஆனால், மத்திய குழுவினர், அறிக்கை சமர்ப்பித்த பின்னரும், இதுவரை வறட்சி நிவாரணம், தமிழகத்துக்கு வழங்கவில்லை.
இதற்கிடையில் கேரளா, கர்நாடகா, ஆந்திர ஆகிய அரசுகள், தமிழகத்துக்கான தண்ணீர் வரும் ஆறுகளில் அணைகள் கட்டுவதற்கு தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதனை தடுத்து நிறுத்துவதற்காக, பிரதமரை சந்தித்து, முதல்வர் எடப்படி பழனிசாமி வலியுறுத்த உள்ளார் என பொதுப்பணி துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக தமிழகத்துக்கு வரும் ஆற்றுப்பகுதியில் அணை கட்டப்படுகிறது. இதுபோன்று அணை கட்டுவதால், தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இதில், அனைத்து பாதிப்புகள் குறித்தும் விளக்கமாக குறிப்பிடப்படுகிறது.
