eps and ops travelling opposite direction eps goed to tirupathi ops coming to chennai
2.30 மணிக்கு..! சென்னைக்கு வரும் ஓபிஎஸ்....திருப்பதிக்கு செல்லும் இபிஎஸ்...! எதிரும் புதிரும்...
இன்று மாலை குடும்பத்துடன் திருப்பதி செல்கிறார் முதல்வர் பழனிசாமி.நாளை காலை ஏழுமலையான் கோவிலில் அஷ்டதளபாத பத்ம ஆராதனை சேவையில் முதல்வர் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதிக்குசெல்லும் இபிஎஸ்
திருப்பதி செல்லும் முதல்வருக்கு காட்பாடியில் 2.30 மணிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி தலைமையில் வரவேற்பு கொடுக்கிறார்.
சென்னைக்கு வரும் ஓபிஎஸ்
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,இன்று பகல் 02:25 மணிக்கு மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்
EPS மற்றும் OPS இருவருமே எதிரும் புதிருமாக ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்

மேலும் காவிரி விவகாரத்தை பற்றி முதல்வர் பேசும்போது..
காவிரி வழக்கில் மே 16ம் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இருந்து திருப்பதி செல்லும் முன் செய்தியாளர்களுக்கு இதனை முதல்வர் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியமும், நீர்பங்கீடு குழுவும் அமைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.
