கோவை, சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம கும்பல் காவி சாயத்தை ஊற்றியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றில் கந்தசஷ்டி கவசம் குறித்து கருப்பர் கூட்டம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து யுட்யூப் சேனல் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் கடவுள் மறுப்பு பேசி வரும் திராவிட இயக்கங்களுக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் சமூக வலைதளங்களில் மோதல் எழுந்துள்ளது.

இந்நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி சென்றுள்ளனர். இதை அறிந்த திராவிட கட்சியினர் அங்கு குவிந்தனர். தகவல் அறிந்த குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கறுப்பர் கூட்டம் விவகாரத்தை திசை திருப்பவே பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டுள்ளதாக கூறப்பருகிறது. 

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள வேறு சிலர், சிலையை அவமானப்படுத்துவதால்  சித்தாந்தங்கள் உடையும் என்று நம்புபவனை விட பெரிய முட்டாள் யாராக இருக்க முடியும்'’ எனக் கூறுகின்றனர்.