Hc issues talking to the prime minister through the chief edappadi palanichamy went to Delhi
தமிழக பிரச்சனைகள் குறித்து, பிரதமர் மோடியிடம் பேசி முறையிடுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார். இன்று பிரதமரை சந்க்கும் அவர், கோரிக்கை மனுவை கொடுக்கிறார்.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி கடந்த 16ம் தேதி பதவியேற்றார். இதைத்தொடர்ந்து கடந்த 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அவருக்கு, எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்து வெற்றி பெற்றாலும், மக்கள் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.

இதனால், தலைமை செயலகத்தில் கடந்த 20ம் தேதி பணியை தொடங்கிய அவர், முதல் கையெழுத்தில் மக்களிடம் நற்பெயரை சம்பாதிக்கும் வகையில், 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு கூடுதல் நிதியுதவி, இளைஞர்களுக்கு உதவித்தொகை, மீனவர்களுக்கு வீடு உள்பட 5 திட்டங்களுக்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து வறட்சி நிவாரண உதவித்தொகை உள்பட சில முக்கிய திட்டங்களை அறிவித்தார். மேலும், பிரதமர் மோடி, கோவையில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றபோது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையம் சென்று அவரை வரவேற்றார்.
பின்னர், பிரதமர் மோடியை தனியாக 10 நிமிடம் சந்தித்து பேசினார். முன்னதாக, பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் ‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என கூறினார்.
இதைதொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு 7.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் நிதியமைச்சர் ஜெயக்குமார், மக்களவை எம்பி வைத்திலிங்கம், முதல்வரின் தனிப்பிரிவு செயலாளர்கள் சிவதாஸ் மீனா, விஜயகுமார் உள்பட 10 பேர் கொண்ட குழு சென்றது.

அங்கு தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் தங்கி ஓய்வு எடுத்தார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து இன்று இரவு 7.30 மணிக்கு மேல் மோடியை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்போது, பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்கிறார்.
இந்த சந்திப்பின்போது, நீட் தேர்வு நடத்துவதில் இருந்து விலக்கு கோருவது, கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வர்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாதிப்பு மற்றும் அதற்கான நிவாரண தொகை பெறுவது மற்றும் தமிழகத்துக்கு உடனடியாக வறட்சி நிவாரண நிதி ஒதுக்க வேண்டும்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க ேவண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்துவார் என கூறடப்படுகிறது.
மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அதை நிறுத்தி வைக்கும்படி வலியுறுத்துவார் என தெரிகிறது.
