பிள்ளையார் சிலையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இதுகுறித்து அவர் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், ‘’மத்திய பாசிச பாஜக மற்றும் மாநில அடிமை எடுபிடி அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் ஊழல்கள் குறித்து நான் பகிரும் போது அவற்றை எடுத்து விவாததித்து பேசு பொருளாக்காதவர்கள் தற்போது பிள்ளையார் சிலையின் புகைப்படத்தை பகிர்ந்ததை பரபரப்பாக விவாதிக்கிறார்கள். 

நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது அதையெல்லாம் விட்டுவிட்டு இதைப் பிடித்துக் கொண்டு வெவ்வேறு விதமாக கயிறு திரிப்பதை பார்க்கையில் இங்கு எது நடந்தாலும் அதை கழகத்துக்கு எதிரானதாக திசை திருப்பும் சந்தர்ப்பவாதிகளின் சதி வேலைகளை தெரிந்து கொள்ள முடிகிறது. ஒரு விஷயத்தை இங்கே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கும், என் மனைவிக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் என் தயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு என்பதை அனைவரும் அறிவர்.

 

எங்கள் வீட்டில் ஒரு பூஜையும் உண்டு. அதில் எங்கள் மூதாதையர்களின் உருவப் படங்கள் உள்ளன. மேலும் என் தாய் எண்ணமும் சிலர் கடவுள் படங்களும் உண்டு முக்கியமான முடிவு எடுக்கும் போது அங்குள்ள மூதாதையர்களின் படங்கள் முன் நின்று அவர்களை மனதில் நினைத்து விட்டுச் செல்வது எங்கள் வழக்கம். இந்நிலையில் பிள்ளையார் சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார் சிலையை வாங்கியிருந்தால் அந்த சிலையை நேற்று இரவு பார்த்த என் மகள் இந்த சிலையை எப்படி செய்வார்கள் என்று கேட்டார். 

 

இந்த சிலை களிமண்ணில் செய்தது. தண்ணீரில் கரைக்க எடுத்துச் சென்று விடுவார்கள் என்று இந்த சிலையை எதற்கு தண்ணீரில் போடணும் என்று கேட்டார். அதுதான் முறை என்கிறார்கள் அடுத்தவர் சொத்துக்கு புதிதாக வேறு என்று வாங்குவார்கள் என்று அழைப்பதற்கு முன் இந்த சிலை இதன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டார் அவரின் விருப்பத்தின் பேரில் நான் தான் அந்தப் புகைப்படத்தை எடுத்தேன். மகள் ரசித்த அந்த சிலையை அவர் அவரின் டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்தேன்’’என அவர் தெரிவித்துள்ளார்.