யெஸ் வங்கி நிதி முறைகேடு வழக்கில் அதன் நிறுவனா் ராணா கபூருக்குச் சொந்தமான ரூ. 2,800 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது.

தனியார் வங்கியான யெஸ் வங்கி, திவாண் ஹவுசிங் நிறுவனம் உள்பட சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு கொடுத்த கடனில் ரூ. 20,000 கோடி அளவுக்கு வாராக் கடனாக மாறியதாகவும், அவ்வாறு தனியார் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்ததன் மூலம் அதன் உரிமையாளராக இருந்த ராணா கபூா் குடும்பத்தினா் முறைகேடாக பல கோடி ரூபாய் சம்பாதித்ததாகவும் புகார் எழுந்தது.இந்தப் புகாரைத் தொடா்ந்து நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, ராணா கபூரிடம் விசாரணை நடத்தி அவரை கடந்த மார்ச் மாதம் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனா். அதனைத் தொடா்ந்து, இந்தியா மட்டுமன்றி வெளிநாட்டிலும் இருக்கும் ராணாவின் சொத்துகளை அமலாக்கத்துறை தற்போது முடக்கி வைத்துள்ளது..


இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறும் போது..."நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் ராணா கபூருக்குச் சொந்தமான ரூ. 2,800 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், திவாண் ஹவுசிங் நிறுவனத்தின் நிர்வாகிகள் கபில் மற்றும் தீரஜ் வதாவன் ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன என்று கூறினா். 
தனியார் மயமாக்கலால் தனியார் வங்கிகள் தாராளமாக இந்தியாவில் திறக்கப்பட்டன. ஆனால் ஒரு சில வங்கிகளை தவிர மற்ற வங்கிகள் எல்லாம் வராக்கடன் என்கிற பேரில் கொள்ளையடிக்க ஆரம்பித்திருப்பதற்கு சான்று தான் யெஸ் வங்கி.