ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் பிரதமருக்கு எதிராகவும் , தேசிய கொடிக்கு எதிராகவும் , இந்திய இறையான்மைக்கு எதிராகவும் தேச விரோதிகள் கோஷம் எழுப்பியுள்ளனர் . இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வலியுறுத்தி உள்ளார்.
கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
தேச விரோதிகள் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் , பிரதமருக்கு எதிராக கோஷம் , தேசிய கொடியை எரிக்க முயற்சி நிச்சயமாக இவர்கள் தேச விரோத சக்திகள்தான். இவர்கள் மீது சரியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தேசவிரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்கணும். தேசிய கொடியை எரித்தவர்கள் , பாரத பிரதமருக்கு எதிராக கோஷமிட்டவர்கள் , இன்று பிரதமராக மோடி உள்ளார். இதற்கு முன்னர் எத்தனையோ பேர் இருந்துள்ளனர். அது ஒரு பதவி அதற்குரிய மரியாதை கொடுக்க வேண்டும். முறையாக விசாரணை நடத்தி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

கோக் பெப்சி தடை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் செயற்கை இனிப்புகள் ஏற்றப்பட்ட பானங்கள் விஷயத்தில் ஏராளமான கேள்விகள் உள்ளது. உடல் நல பாதிப்பு குறித்து சுகாதார நிறுவனங்கள் பல ஆய்வுகள் மூலம் உண்மைகளை தெரிவித்துள்ளன. இதில் பல கேள்விகள் உள்ளது.
கேரளாவில் கூட ஒரு குளிர் பான கம்பெனியின் செயல்பாட்டால் தங்களது நிலத்தடி நீர் முற்றிலுமாக உறிஞ்சப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டதாக கூட கேள்விபட்டுள்ளோம். ஆகவே தடை விதிக்க வேண்டும் போராட்டம் நடத்துபவர்கள் சொந்தமாக எடுக்கும் முடிவு , அது பற்றி அரசு பக்கமிருந்து எதுவும் சொல்வதற்கில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
