தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர், ‘’சிவபெருமான் தமிழ்நாட்டில் தான் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியதாகவும், அனைத்து  நிகழ்வுகளிலும் தமிழிலேயே உரையாடியதாகவும் சிவனடியார்கள் கூறுகின்றனர். அவர்களின் நம்பிக்கையை மதித்து தமிழில் குடமுழுக்கு செய்வது தானே சரியான செயலாக இருக்க முடியும்?

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே. ஆகம விதிகள் இந்தக் கோரிக்கைக்கு எதிராக இல்லை. எனவே, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.

 

தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 17% குறைந்திருப்பது அத்தேர்வு முறையில் தமிழக மாணவர்களுக்கு நம்பிக்கையும், விருப்பமும் இல்லை என்பதையே காட்டுகிறது. மாணவர்களின் உணர்வுகளை மதித்து நீட் தேர்விலிருந்து  தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.

 

ஜனநாயகம் தழைத்தோங்கும் நாடுகளில் இந்தியா 41-ஆவது இடத்திலிருந்து 51-ஆவது இடத்திற்கு சென்றுள்ளது வருத்தமளிக்கிறது. ஜனநாயகத்திற்காக நாம் செய்த தியாகங்களும், கொடுத்த விலையும் அதிகம். ஆகவே, இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும்’’என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.