Asianet News TamilAsianet News Tamil

ஏழை எளிய மக்கள் பாராட்டும் அரசாக எடப்பாடி அரசு வளர்ந்து நிற்கிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம்.!!

ஏழை, எளிய மக்கள் பாராட்டும் அரசாக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Emerging as a state of poor and simple people. Minister Vijayabaskar praised !!
Author
Tamilnadu, First Published May 22, 2020, 11:28 PM IST

 ஏழை, எளிய மக்கள் பாராட்டும் அரசாக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Emerging as a state of poor and simple people. Minister Vijayabaskar praised !!
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்புக் கடன் உதவி திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தை சார்ந்த 448 நபர்கள் அடங்கிய 40 குழுவினர்களுக்கு 22 லட்சத்து 40 ஆயிரம் கடன் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது.ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்காமல் தடுக்கும் வகையில் இந்த சிறப்பு கடனுதவி திட்டம் மூலம் வழங்கப்பட்டது.

Emerging as a state of poor and simple people. Minister Vijayabaskar praised !!

அப்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,உலகமே முடங்கிக் கொண்டிருக்கும் இந்த நிலையில், இந்திய அளவில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை யாருக்கும் கொரோனா தொற்று இல்லாத நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தான் கொரோனா உறுதி செய்யப்படுகிறது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். பல விமர்சனங்கள் சொன்னாலும் ஏழை, எளிய மக்கள் பாராட்டும் அரசாக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்களை அம்மாவின் அரசு வழங்குகிறது.சுய உதவிக் குழுக்களுக்கு குறைவான வட்டியில் கடன் வழங்குவதன் மூலம் அந்த குடும்பமே முன்னேற்றம் அடையும் என்றார்.

Emerging as a state of poor and simple people. Minister Vijayabaskar praised !!
இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட அ.தி.மு.க கழக செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில், கரூர் ஒருங்கிணைந்த நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செளந்தர்ராஜன், கரூர் காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் அர்ஜுனன், கரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பபிரிவு நிர்வாகி சுரேஷ்குமார் சுமார் 30 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், கரூர் நகர மத்திய அ.தி.மு.க கழக செயலாளர் வை.நெடுஞ்செழியன் தலைமையில் அ.தி.மு.க கட்சியில் இணைந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios