திமுக ஆட்சியில் தொடர்ந்து மின் தடைகள் ஏற்படுவது போன்ற மாய தோற்றத்தை எதிர்க்கட்சிகள் செய்து வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டியுள்ளார். 

திமுக ஆட்சியில் தொடர்ந்து மின் தடைகள் ஏற்படுவது போன்ற மாய தோற்றத்தை எதிர்க்கட்சிகள் செய்து வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து பேசிய அவர், ‘’மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நிறைவேற்றுவார். குறைந்த மின் அழுத்தப் பிரச்னைகள் கடந்த ஆட்சியில் சரி செய்யப்படவில்லை. 3 - 4 மாததிற்குள் அந்த பிரச்னை சரி செய்யப்படும். இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த போது ஏன் 4.5 லட்சம் பேருக்கு மின் இணைப்பு தரவில்லை? திமுக ஆட்சியில் மின்தடை ஏற்படுவது போன்ற மாய தோற்றத்தை எதிர்க்கட்சிகள் செய்கின்றன’’ என அவ தெரிவித்துள்ளார்.