Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் சீர்திருத்த மசோதாவால் மாநில உரிமைகள் பறிக்கப்படும்… கே.எஸ்.அழகிரி கண்டனம்!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேர்தல் சீர்திருத்த மசோதா வெகுஜன மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கும்,  மாநிலங்களின் அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும் வழிவகுக்கும் என தாமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார். 

electoral reform amendment bill will affects state rights said k s alagiri
Author
Tamilnadu, First Published Dec 24, 2021, 3:22 PM IST | Last Updated Dec 24, 2021, 3:26 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேர்தல் சீர்திருத்த மசோதா வெகுஜன மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கும்,  மாநிலங்களின் அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும் வழிவகுக்கும் என தாமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார். தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதை தடுக்கவும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யவும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்தது. அதன்படி உருவாக்கப்பட்ட தேர்தல் சட்டத்திருத்த மசோதா 2021க்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இதற்கிடையே, இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் தாக்கல் செய்தார். இதனிடையே மசோதாவை  நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின்னர் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில், தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

electoral reform amendment bill will affects state rights said k s alagiri

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில்  மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேர்தல் சீர்திருத்த மசோதா வெகுஜன மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கும்,  மாநிலங்களின் அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும் வழிவகுக்கும் என தாமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மோடி அரசின் தேர்தல் சீர்திருத்த மசோதா வெகுஜன வாக்குரிமை பறிக்கப்படுவதற்கும் மாநிலங்களின் அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும் வழிவகுக்கும். பணபலத்தில் தேர்தல் நடத்துவதைத் தடுப்பதை உள்ளடக்கியதாக இருப்பதே உண்மையான தேர்தல் சீர்திருத்தம். தேர்தல் சட்ட திருத்த மசோதாவில் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்யுள்ளது. மக்களவையில் எந்த விவாதமும் நடத்தாமல் இதே மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

electoral reform amendment bill will affects state rights said k s alagiri

இது, புட்சாமி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறும் வகையில் உள்ளது. இதுமட்டுமின்றி, வெகுஜன வாக்குரிமையைப் பறிக்க வழிவகுக்கும் என்ற முக்கிய அச்சமும் இருக்கிறது. குடியுரிமைச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட பல பிரச்சினைகளில், ஆதார் அட்டை இல்லாததால் பலர் பிரச்சினையை எதிர்கொண்டதைப் பார்த்தோம். இதனால்தான் தேர்தல் சீர்திருத்த சட்டதிருத்த மசோதாவின் நோக்கம் குறித்த அச்சம் ஏற்படுகிறது. நாட்டில் நடக்கும் அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை மோடி அரசு விரும்புகிறது. மாநிலங்களின் அதிகாரம் மதிக்கப்பட வேண்டும். மேலும், மாநில தேர்தல் ஆணையங்கள் மத்திய அரசின் ஆணைகளை பின்பற்ற நிர்ப்பந்திக்கக் கூடாது.குற்றவாளிகள், வகுப்பு வாதிகள், சாதி வெறியர்கள் மற்றும் வெறுப்பு அரசியலை வாக்காளர்கள் மத்தியில் தூண்டுபவர்களை தடுப்பதிலிருந்து தேர்தல் சீர்திருத்தம் தொடங்க வேண்டுமே தவிர, மாநில அரசுகளின் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைப் பறிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios