Asianet News TamilAsianet News Tamil

ஏப்ரல்- 18 தேதியே தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்..!

தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் மக்களவை தேர்தலோடு வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. 

Elections to 21 constituencies in Tamil Nadu on April 18
Author
Tamil Nadu, First Published Mar 10, 2019, 6:19 PM IST

தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் மக்களவை தேர்தலோடு வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக மே மாதம் 18 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.  Elections to 21 constituencies in Tamil Nadu on April 18

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்-  மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது வரும் ஜூன், 3ஆம் தேதியுடன், தற்போதைய மக்களவை உறுப்பினர்களில் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து 17 வது மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. டெல்லியில் உள்ள விக்யான் பவனில் செய்தியாளர்கள் முன்னிலையில், இந்திய தேர்தல் ஆணையர்களான சுனில் அரோரா, அசோக் லவாசா சுஷில் ஆகியோர் அறிவித்தனர். 

Elections to 21 constituencies in Tamil Nadu on April 18

அதன்படி ‘’ வரும் மே மாதம் தேதி நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக அதாவது முதல் கட்டத்தேர்தல் ஏப்ரல் 11ம் தேதியும், இரண்டாம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 18 , மூன்றாம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 23ம் தேதியும், 4 கட்ட தேர்தல் ஏப்ரல்- 29ம் தேதியும், 5 கட்ட தேர்தல் மே- 6ம் தேதியும்  7ம் கட்டத்தேர்தல் கட்ட தேர்தல் மே-12 ம்தேதியும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 19ம் தேதி தொடங்க உள்ளது. 18 ம்தேதி தொடங்குகிறது. வேட்பு மனு பரிசீலனை 27ம் தேதியும், திரும்பப்பெறுவதற்கான  கடைசி நாள் மார்ச்-29  ஏப்ரல் 18ல் வாக்குப்பதிவு. மே-23ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios