Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் சரவெடிகள் ஆரம்பம்... பிரசாந்த் கிஷோர் மீது வருமானவரித்துறையில் புகார்..! திக்குமுக்காடும் திமுக..!

திமுக இந்த முறை ஆட்சியை பிடிக்க பிரசாந்த்கிஷோர் ஐபேக் டீம்மை நம்பி இருக்கிறது.எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும்.இது திமுகவிற்கு வாழ்வா? சாவா? போராட்டம் என்பதற்காக பெரிய அளவில் பணம் கொடுத்து பிராசந்த்கிஷோரை இறக்குமதி செய்திருக்கிறது திமுக. இவர்களின் திட்டத்தை பணிகளை சுணக்க வேண்டும் என்பதற்காக தற்போது வருமானவரித்துறை ஏவிவிட்டிருக்கிறது பாஜக என்கிற குற்றச்சாட்டு திமுகவினர் மத்தியில் எழுந்திருக்கிறது.
 
Election scams begin ... Complaint against Prasanth Kishore in Income Tax Department ..!
Author
Tamilnadu, First Published Oct 15, 2020, 7:57 AM IST

தி.மு.க.,வின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீதான,வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக,வருமான வரித்துறை விசாரணை நடத்த உள்ளது.
திமுக இந்த முறை ஆட்சியை பிடிக்க பிரசாந்த்கிஷோர் ஐபேக் டீம்மை நம்பி இருக்கிறது.எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும்.இது திமுகவிற்கு வாழ்வா? சாவா? போராட்டம் என்பதற்காக பெரிய அளவில் பணம் கொடுத்து பிராசந்த்கிஷோரை இறக்குமதி செய்திருக்கிறது திமுக. இவர்களின் திட்டத்தை பணிகளை சுணக்க வேண்டும் என்பதற்காக தற்போது வருமானவரித்துறை ஏவிவிட்டிருக்கிறது பாஜக என்கிற குற்றச்சாட்டு திமுகவினர் மத்தியில் எழுந்திருக்கிறது.

Election scams begin ... Complaint against Prasanth Kishore in Income Tax Department ..!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்துக் கொடுக்கும் பொறுப்பை, பிரசாந்த் கிஷோரின், 'ஐபேக்' நிறுவனம் மேற்கொண்டுள்ளது. தி.மு.க., வேட்பாளர் பட்டியல் துவங்கி, பல்வேறு விஷயங்களில், இந்நிறுவனம் செயலாற்றி வருகிறது.இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் மீது, வருமான வரி துறைக்கு, வரி ஏய்ப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 தி.மு.க.,விற்காக பணியாற்றி வரும், பிரசாந்த் கிஷோர் மீதடெல்லியில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு இயக்குனர் ஜெனரல் அலுவலகத்தில், சென்னை, அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த, டி.ராமாராவ் மற்றும் ஆர்.முருகேசன் ஆகியோர், வரி ஏய்ப்பு புகார் தாக்கல் செய்துள்ளனர்.அந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த, சென்னையில் உள்ள, வருமான வரி புலனாய்வு துறைக்கு, டில்லியில் இருந்து கடிதம் வந்துள்ளது. புகார் தொடர்பாக, வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விசாரணை மேற்கொள்ள உள்ளனர். விசாரணை முடிவில், வரி ஏய்ப்பு செய்துள்ளாராஎன்பது குறித்து தெரியவரும்.என்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்.

Follow Us:
Download App:
  • android
  • ios