ஜூலை 18ம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் மாநிலங்களை உறுப்பினர்களாக அதிமுகவை சேர்ந்த ரத்தினவேல், கே.பி.அர்ஜுனன்,  மைத்ரேயன், லட்சுமனன் ஆகிய நான்கு பேரும் திமுகவை சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா 2 பேர் என மொத்தம் ஆறு பேரின் பதவி காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

 

இந்நிலையில் திமுகவிலிருந்து 3 உறுப்பினர்களும், அதிமுகவிலிருந்து 3 உறுப்பினர்களும் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். 34 எம்.எல்.ஏக்கள் சேர்ந்து ஒரு எம்.பியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலையே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். இதற்கான வேட்புமனு ஜூலை 1ம் தேதி தொடங்குகிறது. கடைசி தேதி 8 ம் தேதி. வேட்புமனு பரிசீலனை 9ம் தேதி நடைபெற இருக்கிறது. வேட்புமனு ஜூலை 11ம் தேதி திரும்பபெறப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்டணி ஒப்பந்தப்படி திமுக சார்பில் 2 பேரும் கூட்டணி கட்சியை சேர்ந்த வைகோவும் தேர்ர்தெடுப்பட உள்ளனர். அதேபோல் அதிமுக சார்பில் இருவரும், கூட்டணி கட்சியான பாமகவுக்கு ஒரு பதவியும் கொடுக்கப்பட்ட வாய்ப்புள்ளது.