Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் நாயகன்... தேர்தல் நவீன சாணக்கியன் அமித்ஷா.. ஐஸ் மழை பொழிந்து கூட்டணி உறுதி செய்த ஓபிஎஸ்.!

தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமித்ஷாவை, நவீன காலத்தின் சாணக்கியர் இமயம் தொடும் அளவிற்கு புகழ்ந்து தள்ளினார்.அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி தொடரும் என உறுதியளித்ததால் கட்சி தொண்டர்களிடம் உற்சாகம் பொங்கியிருக்கிறது.
 
Election Man ... Election Modern Chanakyan Amit Shah .. OPS who confirmed the alliance after the ice rain.!
Author
Tamilnadu, First Published Nov 21, 2020, 7:14 PM IST

 தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமித்ஷாவை, நவீன காலத்தின் சாணக்கியர் இமயம் தொடும் அளவிற்கு புகழ்ந்து தள்ளினார்.அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி தொடரும் என உறுதியளித்ததால் கட்சி தொண்டர்களிடம் உற்சாகம் பொங்கியிருக்கிறது.

Election Man ... Election Modern Chanakyan Amit Shah .. OPS who confirmed the alliance after the ice rain.!

அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கபதற்காக மத்திய உள்துறை அமித்ஷா இன்று சென்னையில் முகாமிட்டுள்ளார். சென்னை வந்த அவரை ஏர்போர்ட்டில் வைத்து தமிழகத்தின் முதல்வர், துணை முதல்வர், இதர அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் போட்டி போட்டுக்கொண்டு தாரை தப்பட்டையோடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அலங்காரங்கள் என அமர்க்களப்படுத்தி அமித்ஷா திக்குமுக்காடும் அளவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருவள்ளூரில் ரூ 380 கோடியில் அமைக்கப்பட்ட தேர்வாய் கண்டிகையில் நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார். மேலும் ரூ 61,843 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2’ம் கட்ட திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ. தூரத்திற்கு சென்னை மெட்ரோ ரயிலின் 2’ம் கட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Election Man ... Election Modern Chanakyan Amit Shah .. OPS who confirmed the alliance after the ice rain.!

கோவை – அவினாசி சாலையில் ரூ 1,620 கோடியிலான உயர்மட்ட சாலை திட்டத்தையும், கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ 406 கோடி மதிப்பில் கதவணை திட்டத்தையும் அமித் ஷா தொடங்கி வைத்தார்.மேலும் ரூ. 309 கோடி மதிப்பிலான சென்னை வர்த்தக மையத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்ததோடு, நல்லூரில் ரூ 900 கோடி மதிப்பிலான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

இது தவிர ரூ 1,400 கோடி மதிப்பில் திருமுல்லைவாயிலில் அமையவுள்ள மசகு எண்ணெய் ஆலைக்கு அடிக்கல் நாட்டினார்.இவையனைத்தும் சென்னையிலிருந்து வீடியோ கான்பெரன்ஸ் மூலம் நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் மட்டுமல்லாது தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட அதிமுக மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Election Man ... Election Modern Chanakyan Amit Shah .. OPS who confirmed the alliance after the ice rain.!

 மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்த நிலையில், முன்னதாக கூட்டணி குறித்து முடிவெடுக்க சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடம் முதல்வர் மற்றும் துணைமுதல்வர் கருத்துக்களைக் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது கூட்டணி வெளிப்படையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நடந்த விழாவில் பேசிய தமிழகத்தின் துணை முதல்வர் ஓபிஎஸ், அமித்ஷாவை நவீன காலத்தின் சாணக்கியர் என  புகழாரம் சூட்டினார். மேலும் இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என்று சொல்லி மீண்டும் கூட்டணியை உறுதிபடுத்தினார்.பாஜக, அதிமுக மட்டுமல்லாது பாமக மற்றும் தேமுதிக நிர்வாகிகளும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால், கடந்த பாராளுமன்றத் தேர்தலைப் போல இந்த முறையும் அதே கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios