அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இப்போது தேர்தல் வைத்தால் பிரதமராக மோடியை  ஓரங்கட்டி ராகுல் காந்தி தான் வெற்றி பெறுவார் என  ஒரு கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடிவடைய உள்ளன. இதையடுத்து அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

இது தவிர மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியிலும் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இறங்கியுள்ளனர்.

ஆனாலும் பிரதமர் பதவிக்கு மோடி – ராகுல் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.  பப்பு என பாஜகவினரால் ஏளனமாக வர்ணிக்கப்பட்ட ராகுல் காந்தி கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் பேசிய பேச்சு, பெரும் பாராட்டைப் பெற்றது. இதையடுத்து ராகுல் காந்தியின் இமேஜ் உலக அளவில் உயர்ந்தது.

இதனிடையே தனியார் தொலைக்காட்சி ஒன்று இப்போது தேர்தல் நடந்தால் யார் ஜெயிப்பார்கள் என கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதில் பிரதமர் மோடியை விட ராகுல காந்தி அதிக வாக்கு பெற்று முந்துகிறார்.

இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இதனை பெரிதாக கொண்டாடி வருகின்றனர்.