Asianet News TamilAsianet News Tamil

டபுள் மடங்காகுது தேர்தல் ஆணையர்களின்  சம்பளம்!!

Election commissioners salary wil increase double time
Election commissioners salary wil increase double time
Author
First Published Jan 18, 2018, 11:20 AM IST


உச்சநீதிமன்ற நீதிபதிகளைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையர்களின் சம்பளமும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் 2 தேர்தல் கமிஷனர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ‘தேர்தல் கமிஷன் சட்டம் 1991’-ன்படி உச்சநீதமன்ற  நீதிபதிகளுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் உச்சநிதைமன்றம் மற்றும் உயர்நிதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை 2 மடங்குக்கு மேல் உயர்த்துவதற்கான மசோதா ஒன்று நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.

மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதா, மாநிலங்களவையில் வருகிற பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

அங்கும் இந்த மசோதா நிறைவேறி ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாகி விட்டால், உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதியின் சம்பளம்  1 லட்சம் ரூபாயில் இருந்து  2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக  அதிகரிக்கும்.

உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதிகள் சம்பளம் 90 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகவும், உயர்நீதிமன்ற  நீதிபதிகளின் சம்பளம்  80 ஆயிரம் ரூபாயில் இருந்து  2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக உயரும்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற  நீதிபதிகளின் சம்பளத்தின் அடிப்படையில், 3 தேர்தல் கமிஷனர்களின் சம்பளமும் ரூ.2.50 லட்சமாக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios