Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் ஆணையத்தை நாட ஓபிஎஸ் திட்டமா? வைத்தியலிங்கம் பரபரப்பு தகவல்..!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒற்றைத் தலைமை கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருப்பது போல, இரட்டைத் தலைமை கூடாது என்பதில் இபிஎஸ் தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கமே உள்ளதால் அவர் பொதுச்செயலாளர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

Election Commission planning to go? Vaithilingam information
Author
Chennai, First Published Jun 22, 2022, 11:29 AM IST

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் செல்லும் திட்டம் எதுவும் இல்லை என ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்தியலிங்கம் தெரிவிதத்துள்ளார். 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒற்றைத் தலைமை கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருப்பது போல, இரட்டைத் தலைமை கூடாது என்பதில் இபிஎஸ் தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கமே உள்ளதால் அவர் பொதுச்செயலாளர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. Election Commission planning to go? Vaithilingam information

ஆனால், இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். ஆனால்,  ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று இபிஎஸ் தரப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். 

இதையும் படிங்க;- ஓ.பன்னீர்செல்வத்தின் இறுதி அஸ்திரம் இதுதானா? விழுவாரா? திமிரு எழுவாரா? எடப்பாடியார்..!

Election Commission planning to go? Vaithilingam information

இதனிடையே, இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுக்குழு கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதை தடுக்கும் விதத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொதுக்குழு கூட்டத்திற்கு  காவல்துறை அனுமதி  கொடுக்கக்கூடாது என்று ஆவடி மாநகர காவல் ஆணையருக்கு  ஓபிஎஸ் ஒரு மனு கொடுத்திருந்தார். இதைப் போன்ற ஒரு கடிதத்தை பொதுக்குழு நடைபெற உள்ள திருமண மண்டப நிர்வாகிக்கும் கடிதம் அனுப்பியிருந்தார். இந்த முயற்சி அனைத்தும் தோல்விலேயே முடிந்தது. 

Election Commission planning to go? Vaithilingam information

இந்நிலையில்  பொதுக்குழுவை  ரத்துசெய்ய கடைசி ஆயுதமாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் தான் உண்மையாக அதிமுக என்று முறையிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்;- ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் செல்லும் திட்டம் எதுவும் இல்லை. ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் செல்ல உள்ளதாக பரவிய தகவல் தவறானது. தேர்தல் ஆணையத்துக்கு போக வேண்டிய நேரத்தில் போவாம் என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- எடுத்த முயற்சி எல்லாம் தோல்வி... ஓபிஎஸ்ஸின் இந்த கோரிக்கையும் நிராகரிப்பு.. பொதுச்செயலாகிறார் இபிஎஸ்?

Follow Us:
Download App:
  • android
  • ios