Asianet News TamilAsianet News Tamil

டி.டி.வி., அணிக்கு எதிராக வாக்கு எந்திரத்தில் சூழ்ச்சி... ஆடிப்போய் கிடக்கும் அமமுக..!

அமமுகவின் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக அதே தொகுதியில் அதே பெயரில் குக்கர் சின்னத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்குவது டி.டி.வி.தினகரன் தரப்பிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. 

election commission check ttv dhinakaran
Author
Tamil Nadu, First Published Apr 4, 2019, 1:01 PM IST

அமமுகவின் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக அதே தொகுதியில் அதே பெயரில் குக்கர் சின்னத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்குவது டி.டி.வி.தினகரன் தரப்பிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. 

ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற குக்கர் சின்னத்தையே மக்களவை தேர்தலுக்கும் ஒதுக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. குக்கர் சின்னத்திற்கு பதிலாக பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். election commission check ttv dhinakaran

ஆனாலும் அசராத அமமுகவினர் இந்த சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்போம் என்று சூளுரைத்து கடும் களப்பணியாற்றி வருகின்றனர். அதேவேளை குக்கர் சின்னத்தை சுயேச்சைகளுக்கு ஒதுக்கக்கூடாது என கோரிக்கை வைத்தனார். அவற்றை சட்டை செய்யாத தேர்தல் ஆணையம் பலருக்கும் சுயேட்சை சின்னத்தை வழங்கியது டி.டி.வி. தரப்பை அதிர வைத்தது. 

இது பெரும் தலைவலியாக அமமுகவுக்கு அமைந்து விட்டது. திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் அங்கு காமராஜ் என்ற மற்றொரு சுயேச்சைக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வாக்களிக்கும் இயந்திரத்தில் அடுத்தடுத்து குக்கர் சின்னமும், பரிசு பெட்டி சின்னமும் இடம்பெறுவதால் டி.டி.வி.யின் வாக்குகள் குழப்பத்தால் மாறி சுயேச்சைகளுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படும். election commission check ttv dhinakaran

அதேபோல் பாப்பிரெட்டிப்பட்டியில் அமமுக வேட்பாளர் டி.கே.ராஜேந்திரன் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியிலும் அதே பெயரில் சுயேச்சையாக போட்டியிடும் ராஜேந்திரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரூரில் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஆர்.முருகனுக்கு எதிராக, முருகன் என்ற பெயரிலேயே சுயேச்சை வேட்பாளர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். சாத்தூரிலும் அமமுக வேட்பாளர் எஸ்.சி.சுப்பிரமணியம் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் போட்டியிட இருக்கும் நிலையில் அங்கும், அவரது பெயரிலேயே சுயேச்சை வேட்பாளர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதுபோன்றே பல இடங்களிலும் பரிசு பெட்டுஇ சின்னத்திற்கு அடுத்து குக்கர் சின்னம் இடம்பெற்றுள்ளது குழப்பத்தை உருவாக்கி உள்ளது. election commission check ttv dhinakaran


இதுகுறித்து அமமுகவினர் கூறுகையில், ’’டி.டி.விக்கு தென் மாவட்டங்கள் மட்டுமின்றி பல இடங்களில் செல்வாக்கு பெருகிவருகிறது. அதனால் அமமுக வேட்பாளரின் பெயர் கொண்ட சுயேச்சை வேட்பாளர்களை களமிறக்கி அமமுகவின் வாக்குகளை பிரித்து வெற்றியை பறிக்க மத்திய, மாநில அரசுகள் நினைக்கின்றன. ஆளும் தரப்பினரின் அழுத்தத்தில்தான் தேர்தல் ஆணையம் இவ்வாறு சுயேச்சைகளுக்கு சின்னத்தை ஒதுக்கியுள்ளது. நடுநிலையோடு செயல்படும் அமைப்பு தேர்தல் ஆணையம் என்ற கூற்று இதன்மூலம் மரணித்துவிட்டது என்பது உறுதியாகிவிட்டது. இருந்தாலும் சூழ்ச்சிகள் அனைத்தையும் சுக்கு நூறாக்கி இத்தேர்தலில் எங்களது பலத்தை காண்பித்தே தீருவோம்'’ எனக் கூறுகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios