Election commission restricted for campaign 10th onward at RK Nagar



ஆர். கே நகர் தொகுதியில், வரும் 12  ஆம் தேதியன்று தேர்தல்  நடைபெற  உள்ளதால், தீவிர  பிரசாரத்தில்  ஈடுபட்டுள்ள கட்சி வேட்பாளர்களுக்கு  பிரச்சாரம்  குறித்த  விதிமுறைகளை தேர்தல்  ஆணையம் வெளியிட்டுள்ளது .

அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 10ம் தேதி மாலை 5 மணி முதல், 12-ம் தேதி மாலை 5 மணி வரை பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது என  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .

இதே போன்று, வரும் 10ம் தேதி மாலை 5 மணி முதல் 12-ம் தேதி மாலை 5 மணி வரை திரைப்படம், தொலைக்காட்சி, ரேடியோ, சமூகவலைதளங்களிலும்  எந்த  பிரச்சாரமும்  செய்ய  கூடாது  என  தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல்  பிரச்சாரம்  செய்ய  கால அவகாசம் இன்னும்  சரியாக  2 நாட்களே உள்ள  நிலையில்,  வேட்பாளர்களின்   பிரச்சாரம்  சூடு  பிடிக்கும் என  எதிர்பார்க்கப் படுகிறது .

ஏற்கனவே  பணபட்டுவாடா உள்ளிட்ட  பல  பிரச்சனைகள்  நடந்து வரும் நிலையில் , அடுத்து வரும் இரண்டு நாட்களில் ஆர்  கே நகரில் எந்தெந்த மாற்றம் வருமோ என்ற  எதிர்பார்ப்பு  கிளம்பியுள்ளது .