சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஆசிரியை திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது
சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் வடக்கு தொகுதியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் சேலம் சின்னதிருப்பதி உள்ள தனியார் கலைக் கல்லூரியில் நேற்று தொடங்கியது

இந்தப் பயிற்சிக்காக சேலம் மாவட்டம் தேவனூர் நடுநிலை பள்ளியை சேர்ந்த ஆசிரியை நித்யா கலந்து கொண்டார். அப்போது ஆசிரியை நித்யா அவர்களுக்கு திடீரென மதியம் நெஞ்சு வலி ஏற்படவே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆசிரியை கொண்டு செல்லப்பட்டுள்ளார். தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
