Asianet News TamilAsianet News Tamil

இடைத் தேர்தல் பணிகளில் ஜரூராய் களமிறங்கிய அதிமுக !! பிரச்சாரக் குழு பொறுப்பாளராக வைகை செல்வன் அதிரடி நியமனம்…..

தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரக் குழு பொறுப்பாளராக அதிமுக சார்பில் வைகைசெல்வனை நியமித்து  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ  மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்  உத்தரவிட்டுள்ளனர்.

election campaign representative vaigai selvan
Author
Chennai, First Published Nov 8, 2018, 11:14 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.இதையடுத்து தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன் உள்பட 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.

election campaign representative vaigai selvan

சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து  18 பேரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அந்த வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிமன்றம உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மேல் முறையீடு செய்யப்போவதில்லை எனவும் இடைத்தேர்தலை சந்திக்க தயார் எனவும் டிடிவி தினகரன் தரப்பினர் அறிவித்தனர்.

election campaign representative vaigai selvan

இதையடுத்து அந்த 18 தொகுதிகள் மற்றும் கருணாநிதி மற்றும் ஏ.கே.போஸ் ஆகியோர் மரணமடைந்ததைத் தொடர்ந்து திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் என மொத்தம் 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

election campaign representative vaigai selvan

இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  ஆயிகியோர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது . இதைத் தொடர்ந்து . ஆளும் அதிமுகவும் இடைத் தேர்லை சந்திக்க தயார் என அறிவித்தது.

election campaign representative vaigai selvan

இதையடுத்து  இடைத்தேர்தல் பிரச்சாரக் குழு பொறுப்பாளராக அதிமுக சார்பில் வைகை செல்வனை நியமனம் செய்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios