Asianet News TamilAsianet News Tamil

17 வது மக்களவை தேர்தல் 2019...தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான 10 குறிப்புகள்...

2019 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்திருக்கும் நிலையில், அவரது அறிவிப்பில் வெளியான தேர்தல் குறித்து தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான சில குறிப்புகள் இதோ...

election 2019 some tips
Author
Delhi, First Published Mar 10, 2019, 5:40 PM IST

2019 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்திருக்கும் நிலையில், அவரது அறிவிப்பில் வெளியான தேர்தல் குறித்து தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான சில குறிப்புகள் இதோ...election 2019 some tips

*மொத்தம் இந்தியாவில் 90 கோடி வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்கத் தகுதியானவர்களாக உள்ளனர். 

 *இந்தத் தேர்தலில் 8.4 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

*அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் எனத் தெரிந்து கொள்ள முடியும். 

*கடந்த ஆண்டு 9 லட்சமாக இருந்த வாக்குச்சாவடிகள் இந்தாண்டு 10 லட்சமாக உயர்ந்த்தப்பட்டுள்ளது.

*18 முதல் 19 வயதுக்குள் 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.election 2019 some tips

*வேட்பாளர்கள் படிவம் 26 தாக்கல் செய்யாவிட்டால் வேட்புமனு நிராகரிக்கபப்டும்.

*இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கி வைக்கக்கூடாது.

*இலவச டோல்பிரீ எண் 1950 மூலம் புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சரிபார்க்கலாம்.

*தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆன்ட்ராய்டு செயலி மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

*வாக்குசாவடிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து புகார் அளிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும்.

Follow Us:
Download App:
  • android
  • ios