elangovan has rolled money to Kushubu
தமிழக காங்கிரஸில் எந்த பதவியிலும் இல்லாவிட்டாலும் கூட பரபரப்பு தன்னை வட்டமிடும் வகையில் வைத்துக் கொள்வார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அந்த வகையில் சமீபத்தில் அவர் கொளுத்திப்போட்ட பட்டாசு இப்போது அவரை சுற்றி வெடிக்க துவங்கியிருக்கிறது.
தமிழக காங்கிரஸின் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர் மாற்றப்பட போகிறார் எனும் ரீதியில் சமீபத்தில் பேசி சர்ச்சையை பற்ற வைத்தார் இளங்கோவன். இந்த விவகாரத்துக்கு பதில் சொல்லியிருக்கும் அக்கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவரான கராத்தே தியாகராஜன் “தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களும் மீண்டும் அதே பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது.
இதன்படி வருகிற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் வரை திருநாவுக்கரசரே தமிழக காங்கிரஸின் தலைவராக தொடர்வார்.
ஆனால் இதற்குள் குழப்பம் விளைவிக்க இளங்கோவன் முயல்கிறார். தலைமையின் சொல்லை மீறி நடந்ததால்தான் அவரது பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும் மாறவில்லை அவர். தொடர்ந்து அப்படியே பேசி வருகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொருளாளரான மோதிலால் ஓரா, தமிழக காங்கிரஸ் கட்சியின் பணம் ரெண்டு கோடியை இளங்கோவன் கையாடல் செய்துவிட்டதாக அவருக்கு ‘ஷோகாஸ்’ நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு இன்று வரை பதில் சொல்லவில்லை இளங்கோவன். அந்த 2 கோடியில் சுமார் 50 லட்சம் ரூபாயை குஷ்புவுக்கு கொடுத்தார் என்றே சொல்லப்படுகிறது.” என்று போட்டுத் தாக்கிய கராத்தே...
“தமிழக அரசியலில் வரும் காலத்தில் இரண்டு துருவங்கள்தான் இருக்கும். ஒன்று ஸ்டாலின் தலைமையிலான அணி மற்றொன்று ரஜினி தலைமையிலான அணி. நான் ரஜினி துவக்கும் கட்சிக்கு செல்கிறேனா? என்று சிலர் கேட்கிறார்கள்.
அதற்கு என் பதில், தேசிய கட்சியான காங்கிரஸில் நல்ல முறையில் பணியாற்றி கொண்டிருக்கிறேன்! என்பதே” என்று ரஜினி கட்சியை நோக்கி நகரும் விஷயத்துக்கு பொத்தாம் பொதுவாக பதில் சொல்லியிருக்கிறார் கராத்தே தியாகராஜன்.
