கெட்டிக்காரன் புளுகு போல் எட்டு நாள் அல்ல எட்டு மணி தான் என்றாகியது என மோடியை விமர்சித்தவர்களுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். 

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியப் பிரதமர் மோடியிடம் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து மத்திய அரசு, அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்வதை உறுதி செய்தது. ட்ரம்ப் மிரட்டிக் கேட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. 

இந்நிலையில், ‘’நெருக்கடியான நேரங்கள்தான் நெருக்கத்தை அதிகப்படுத்தும் என்ற அதிபர் டிரம்பின் கூற்றை ஆதரிக்கிறேன் - பிரதமர் மோடி. இந்தியா - அமெரிக்காவின் உறவு முன்பைவிட வலுவடைந்துள்ளது’’ என ட்ரம்பின் ட்விட்டிற்கு பதிலளித்துள்ளார் மோடி. 

 

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’முதலில் ஒரே நேரத்தில் வீட்டு மின் விளக்குகளை அணைத்து விட்டு மீண்டும் ஒரே நேரத்தில் ஆன் செய்தால் கிரிட் பாதிக்கும் என்று பேசிய நிபுணர்கள். நேற்று அமெரிக்கா இந்தியாவை மிரட்டியதாக பரப்புரை செய்தனர். ஆனால், எல்லாம் கெட்டிக்காரன் புளுகு போல் எட்டு நாள் அல்ல எட்டு மணி தான் என்றாகியது’’ எனத் தெரிவித்துள்ளார்.