எம்.பி. ஆ. ராசா மீது நாடாளுமன்ற மூலமாக நடவடிக்கை எடுக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் இது போன்ற கருத்துக்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் தக்க பதிலடி கிடைக்கும் என நெல்லையில் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
எம்.பி. ஆ. ராசா மீது நாடாளுமன்ற மூலமாக நடவடிக்கை எடுக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் இது போன்ற கருத்துக்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் தக்க பதிலடி கிடைக்கும் என நெல்லையில் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் நெல்லை சட்டமன்ற தொகுதி தொடர்பான கோரிக்கைகளை குறித்து நயினார் நாகேந்திரன் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தில் முதலமைச்சர் ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான 10 கோரிக்கைகள் தெரிவிக்க அறிவுறுத்தியதன்படி மாவட்ட ஆட்சியரிடம் நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 10 கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணையை டனல் மூலம் இணைத்தால் எந்த காலத்திலும் தண்ணீர் பிரச்சனை நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வராது. இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.
இதையும் படியுங்கள்: பர்கரில் கையுறை கிடந்த அதிர்ச்சி சம்பவம்.. KFC சிக்கன் 34 தரச் சோதனை..பரபரப்பு விளக்கம் அளித்த நிர்வாகம்
நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தெரிவித்த கருத்திற்கு அனைத்து தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்து பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களும் ஆ. ராசா பேசிய கருத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். இவ்வளவு மோசமான மனிதரை நாட்டில் வைப்பது எப்படி என்ற அடிப்படையில் தான் அனைத்து காவல் நிலையங்களிலும் ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்துள்ளோம். அனைத்து பெண்களும் பெண்களை கேவலமாக பேசிய கருத்தாக இதனை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
இதையும் படியுங்கள்: லஞ்ச ஒழிப்பு சோதனை: அதிமுக மாஜி அமைச்சர்கள்தான் தங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டும்- ஓபிஎஸ்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆ. ராசாவின் கருத்திற்கு தக்க பதிலடி கிடைக்கும். ஆ. ராசா பேசிய கருத்தை எடுத்துரைத்து பாராளுமன்றத்திலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மாநில காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஆளுங்கட்சி ஆ.ராசா மீது கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். பொதுமக்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும். தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி பாரபட்சத்துடன் நடந்து வருகிறது. தமிழகத்தில் சமூக நீதிப் பெயரளவு தான் உள்ளது. சங்கரன்கோவில் பகுதியில் நடந்த சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது வன்மையாக கண்டிக்கத்தக்க விஷயம். தமிழகத்தில் பாஜக இருக்கும் கூட்டணி தொடரும். தேர்தல் வரும் போது எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பதை அறிவிப்போம் இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
