பாகிஸ்தான் மீதான ராணுவத் தாக்குதல்களை  பாஜக அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துவதாக, ஏற்கெனவே  எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, ஒவ்வொரு நாளும் பாஜக-வுக்குஆதரவான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது ,  

காற்று பாஜகவின் பக்கம் வீசுகிறது. இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தீவிரவாதிகளின் பதுங்கிடங்களை அழித்திருப்பது, நாட்டில் மோடி ஆதரவு அலையை உருவாக்கியுள்ளது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இதன் தாக்கம் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தெரியும் என்றும், குறிப்பாக, கர்நாடகத் தில் 28 தொகுதிகளில் 22-இல் பாஜகவுக்கு வெற்றி கிட்டும்” என்றும் எடியூரப்பா  கூறியுள்ளார்

இந்திய வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் கைதுசெய்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல், ராணுவ வீரர்களின் தியாகத்தை வைத்து, இவ்வாறு மலிவான அரசியல் செய்துள்ளார் என எடியூரப்பாவுக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.