Asianet News TamilAsianet News Tamil

அவருக்கு வயசாச்சுங்க ! எடியூரப்பாவுக்கு எதிராக பொங்கும் பாஜக எம்எல்ஏக்கள் !! பதவி ஏற்பதில் சிக்கல் !!

கர்நாடகாவில் முதலமைச்சராக  தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படும் எடியூரப்பாவுக்கு தற்போது 76 வயது ஆவதால் அவர் பதவி ஏற்பதில் சிக்கலை ஏற்பட்டுள்ளது. எடியூரப்பா இல்லாமல் வேறு யாராவது முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என சில பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
 

ediyurappa is not eligible for become cm
Author
Bangalore, First Published Jul 25, 2019, 11:27 PM IST

பாஜகவில் 75 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆட்சி ரீதியான பதவி எதுவும் வழங்குவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் 75 வயதை கடந்து விட்ட முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள்  பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு கடந்த தேர்தலில் சீட் கூட கொடுக்கப்படவில்லை.

இதே போல் குஜராத் முதலமைச்சராக இருந்த  ஆனந்திபென் பட்டேல் கூட பதவியை இழந்தார். தற்போதைய மத்திய  அமைச்சரவையில்  75 வயதை கடந்தவர்கள் யாருக்கும் பதவி வழங்கவில்லை.

ediyurappa is not eligible for become cm

ஆனால் கர்நாடகாவில் முதலமைச்சராக  தேர்வு செய்யப்படுவார் என எதிர் பார்க்கப்படும் எடியூரப்பாவுக்கு தற்போது 76 வயது ஆகிறது. இதயைடுத்து வயது விவகாரம் அவர் பதவி ஏற்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்ற நிலை உள்ளது. 

76 வயதில் அவர் பதவி ஏற்றால் இன்னும் 4 ஆண்டுகள் முதலமைச்சர்  பதவியில் இருக்க முடியும். அப்போது 80 வயது வரை அவர் பதவியில் இருப்பார். இது கட்சி கொள்கைக்கு மாறுபாடானதாக இருக்கிறது. எனவே கொள்கையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டிய கட்டாயம் பாஜக மேலிடத்திற்கு ஏற்பட்டுள்ளது.

ediyurappa is not eligible for become cm

ஆனால் கர்நாடகாவில் பாஜக ஆட்சி ஏற்படுவதற்கு காரணமாக எடியூரப்பாதான் இருந்தார். அவரை நம்பித்தான் அங்கு கட்சியே இருக்கிறது. எல்லோரும் அவரை பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர்.

அப்படி இருக்க எடியூரப்பாவுக்கு பதவி வழங்காமல் இருக்க முடியாது. எனவே அரசியல், பதவியில் வயது வரம்பை பாரதிய ஜனதா தளர்த்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios