Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடியாரை லாக் செய்து.. துன்புறுத்தி.. கதறிய அமைச்சர்.. ஸ்டாலின் மீது பகீர் குற்றச்சாட்டு.

இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் கோடநாடு குறித்து சட்டமன்றத்தில் பேச முற்பட்டது அவரது உரிமை என்றவர், எதிர்கட்சி தலைவரை லாக் செய்து , பேசவிடாமல் மனரீதியான துன்புறுத்தல் அளித்து, சுதந்திரமாக கருத்து  சொல்லவிடாமல் சங்கடம் கொடுக்க சட்டசபயை பயன்படுத்துவதாகவும், அதனால் சட்ட மன்றத்தில் இருந்து  அதிமுக வெளிநடப்பு  செய்ததாகவும் அப்போது தெரிவித்தார்.

Edappadiyara locked .. persecuted ..  Minister screaming ..  shocking accused mk stalin.
Author
Chennai, First Published Aug 23, 2021, 11:16 AM IST

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து எந்த காலத்திலும் சட்டமன்றத்தில் விவாதிப்பது மரபு இல்லை என கோடநாடு விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், எதிர்கட்சி தலைவரை பேரவையில் பேசவிடாமல், மனரீதியான துன்புறுத்தல் அளிக்க வேண்டும் என்று பேரவையில் கோடநாடு விவகாரம் பேசப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

Edappadiyara locked .. persecuted ..  Minister screaming ..  shocking accused mk stalin.

அப்போது பேசிய அவர் காங்கிரஸ், கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவர் செல்ப பெருந்தகை கொடநாடு தொடர்பாக ஊடகத்தில் சில கருத்துகள் பேசி உள்ளதாகவும், சட்டமன்ற பேரவை விதி 55 கீழ் கோடநாடு விவகாரம் குறித்து அவசரம் பொது பொது முக்கியதுவம் வாய்ந்த பிரச்சனையாக பேரவையில் எழுப்ப உள்ளதாக பேட்டி அளித்துள்ளார்.ஆனால் சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டிய விஷயம் நாட்டில் எவ்வளவோ உள்ளது, கோடநாடு விவகாரம் அவசர பொது முக்கியதுவம் வாய்ந்ததா என கேள்வி எழுப்பினார். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் உள்ள நிலையில்,  கோடநாடு குறித்து அவசர பொது முக்கியதுவம் வாய்ந்ததாக பேச கேட்பது என்ன மரபு இல்லை என்றார். எனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து எந்த காலத்திலும் சட்டமன்றத்தில் விவாதித்தது இல்லை,  எங்களுடைய ஆட்சியில் மரபுகள் எப்படி கட்டி காகப்பட்டதோ அதே மாதிரி திமுக கட்டி காக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக கூறினார்.

Edappadiyara locked .. persecuted ..  Minister screaming ..  shocking accused mk stalin.

இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் கோடநாடு குறித்து சட்டமன்றத்தில் பேச முற்பட்டது அவரது உரிமை என்றவர், எதிர்கட்சி தலைவரை லாக் செய்து , பேசவிடாமல் மனரீதியான துன்புறுத்தல் அளித்து, சுதந்திரமாக கருத்து  சொல்லவிடாமல் சங்கடம் கொடுக்க சட்டசபயை பயன்படுத்துவதாகவும், அதனால் சட்ட மன்றத்தில் இருந்து  அதிமுக வெளிநடப்பு  செய்ததாகவும் அப்போது தெரிவித்தார். எங்களுக்கு மடியில் கணம் இல்லை, எங்களுக்கு வழியில் பயம் இல்லை என்றவர், கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக மறு விசணைக்குஎந்தவொரு நீதிமன்றத்திலும் அனுமதி வாங்க வில்லை என்று ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்தார். நீதிமன்றத்தில் வழக்கு இல்லை என்றால் அதை குறித்து விவாதிக்க தயார். ஆனால் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது என்றார். மேலும் செல்வ பெருந்தகை திமுகவின் கைபாவை எனவும் அவர் அப்போது விமர்சித்தார். 

Edappadiyara locked .. persecuted ..  Minister screaming ..  shocking accused mk stalin.

தொடர்ந்து பேசிய அவர், விழுப்புரத்தில் திமுக கொடி கட்டும் பணியினால் 13 வயது சிறுவன் உயிர் இழந்துள்ளான். குழந்தை தொழிலாளியை பணியில் அமர்த்தியதற்காக அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்போது வலியுறுத்தினார். இவரை தொடர்ந்து அதிமுக சட்ட ஆலோசனை குழு தலைவர் இன்பதுறை பேசுகையில், நீதிமன்றத்தில்  வழக்கு இருக்கும் நிலையில் கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் 55 விதியின் கீழ் விவாதிப்பதி சட்சத்திற்கு புறம்பானது என்றும் இது போல செல்வ பெருந்தகை மீதுள்ள வழக்குகளை சட்டமன்றத்தில் பேசலாமா என வழக்குகளை அப்போது பட்டியலிட்டார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios