முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசு மூலமாக, கொரோனா எதிரோலியாக சீனாவிலிருந்து வெளியேறிய தொழில் நிறுவனங்களை கொண்டு தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறது.
சீனாவில் இருந்து வெளியேறிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.சி சம்பத் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 3 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஹோஸ்டியா அலுவலகத்தை தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அதில் அவர் பேசியதாவது: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கையின் காரணமாக ஓசூரில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் வலிமை பெற்றுள்ளது. ஓசூரில் 2000 க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் ஓசூர் முதன்மை தொழில் நகரமாக உள்ளது.
இந்நிலையில் ஓசூர் மற்றும் குருபரப்பள்ளி, சூளகிரியில் மற்றொரு சிப்காட் துவங்கப்பட உள்ள நிலையில், சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசு மூலமாக, கொரோனா எதிரோலியாக சீனாவிலிருந்து வெளியேறிய தொழில் நிறுவனங்களை கொண்டு தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறது. இதில் டெல், நோக்கியா மற்றும் ஆட்டோமொபைல், கனரக வாகன உற்பத்தி என பல்வேறு தொழில் நிறுவனங்கள் கொண்டுவரப்படவுள்ளது. இதனால் உலக அளவில் தொழில் வளர்ச்சியில் முதல் 10 இடங்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த குளோபல் முதலீடு மாநாடு மூலம் ரூபாய் 3 லட்சம் கோடி மதிப்பீட்டில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 304 தொழில்நிறுவனங்கள் 24 சதவீத உற்பத்தி செய்து விற்பனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மீதியுள்ள நிறுவனங்கள் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 82 சதவீதம் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கொரோனா காலங்களில் 55 தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ரூபாய் 40 ஆயிரத்து 304 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளார்கள். 74 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலும் தொழில் முதலீடுகளை ஈர்த்து மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 30, 2020, 2:22 PM IST