முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசி சமாதானம் ஆக செல்ல நாங்கள் தயாராகவே இருப்பதாக அறந்தாங்கி எம்.எல்.ஏ.வும் டிடிவி. தினகரன் ஆதரவாளருமான ரத்தினசபாபதி கூறியுள்ளார்.

தினகரன் தரப்பிலிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் மூன்றுபேரை பதவிநீக்கம் செய்யும் முடிவில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். அடுத்த வாரம் இவர்கள் 3 பேரும் எம்.எல்.ஏ.க்கள் ஆக இருக்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி. இந்த நிலையில் சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிகள் எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ரத்தினசபாபதி, தங்கள் தற்போதும் அதிமுகவிலையே நீடிப்பதாக கூறினார். 

தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை இயக்கத்திலிருந்து கட்சியாக மாறிய உடனேயே அதில் இருந்து தாங்கள் விலகிவிட்டதாகவும் ரத்தினசபாபதி தெரிவித்தார். தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்கள் உறுப்பினர்கள் கூட இல்லை என்று தெரிவித்த ரத்தினசபாபதி தங்களுக்கு எந்த பதவியும் அந்த கட்சியில் இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார். இந்த விவகாரம் குறித்து பேச முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் அழைத்தால் தயக்கமின்றி நாங்கள் செல்வோம் என்றும் ரத்தினசபாபதி தெரிவித்தார்.

அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி தினகரன் ஆதரவாளராக இருந்தாலும் கூட எடப்பாடி ஓபிஎஸ் மற்றும் தினகரன் என மூன்று பேரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று முதலில் இருந்தே கூறிவிடுகிறார். அதனை மனதில் வைத்தே எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கத் தயார் என்று ரத்தினசபாபதி கூறியிருந்தாலும் எடப்பாடியை சந்தித்து சமாதான படுத்தி எம்எல்ஏ பதவியில் நீடிக்க வேண்டும் என்பதுதான் ரத்தினசபாபதி மூலம் எண்ணம் என்ற இதன் மூலம் தெரிவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 

டிடிவி. தினகரனின் ஆதரவாளராக இருந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி சந்திக்க தயார் என்று கூறி இருப்பதன் மூலமே அவர்கள் சமாதானத்திற்கு தயாராகி விட்டார்கள் என்று தெரிவதாக அதிமுகவினர் கிசுகிசுக்கின்றனர். இதனிடையே பதவியைக் காப்பாற்றிக்கொள்ள சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தை சந்தித்ததாக வெளியான தகவலை விருதாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.