Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலினை கடைசிவரை தண்ணீர் குடிக்க வைத்த எடப்பாடி... திமுகவின் விழி பிதுங்கிய வெற்றி..!

அமமுக பிரிவு, தேமுதிக கூட்டணியில் இருந்து விலகல், உட்கட்சி பூசல், 10 ஆண்டுகால ஆட்சி என பல விஷயங்களை தாண்டி78 இடங்களில் வெற்றி பெற்றது அசாதாரணம்தான். இது எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையில் தோல்வி அல்ல என்றே பலரும் கருதுகின்றனர்.  
 

Edappadi who made Stalin drink water till the end ... DMK's eye-popping victory
Author
Tamil Nadu, First Published May 2, 2021, 5:42 PM IST

ஜெயலலிதா மறைந்த பிறகு, தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி. அடுத்து அதிமுக இரண்டாக உடைந்து ஓ.பி.எஸ்- எடப்பாடி அணி உருவாகி சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்ட்வரப்பட்டபோதும் அதிமுக ஆட்சியை தக்க வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அடுத்து டி.டி.வி.தினகரனுடன் எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் சென்றபோதும் அதிமுக ஆட்சி அவ்வளவு தான் எனக் கூறப்பட்டது. ஆனாலும் அதிலிருந்தும் அதிமுக ஆட்சியை காப்பாற்றினார் எடப்பாடி. Edappadi who made Stalin drink water till the end ... DMK's eye-popping victory

பத்து நாட்கள்தான் அதிமுக ஆட்சி இருக்கும். ஒரு மாதத்தில் கலைந்து விடும். 3 மாதத்தில் காலி எனச் சொல்லி வந்தார் மு.க.ஸ்டாலின். ஆனால் அவரால் அசைக்க முடியவில்லை.  அடுத்து வந்தைடைத்தேர்தலிலும் ஆட்சிக்கு தேவையான எம்.எல்.ஏ.,க்களை வெற்றிபெற வைத்து ஸ்ட்ராங்காக அதிமுக ஆட்சியை நிலை நிறுத்தினார். எடப்பாடி பழனிசாமி. Edappadi who made Stalin drink water till the end ... DMK's eye-popping victory

அடுத்து சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 இடங்களுக்கு மேல் வெல்லும். அதிமுக சொற்ப அளவில் மட்டுமே வெற்றிபெற முடியும் என பலரும் கூறி வந்தனர். ஆனாலும் உள்ளூர திமுகவுக்கு இந்த முறையாவது வெற்றி பெற முடியுமா என்கிற சந்தேகம் பற்றி எரிந்து கொண்டே தான் இருந்தது.  மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை எனக் கருதி கதிகலங்கிக் கிடந்தார் மு.க.ஸ்டாலின்.  இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இருந்த பின்னடைவு குறைந்த அளவிலேயே இருந்தது. 125 இடங்களில் திமுக இருந்த முன்னணி வகித்தால் அதனை தொடர்ந்து 100 இடங்களுக்கு மேல் முன்னணி வகித்தது அதிமுக. இது திமுக வயிற்றில் புளையை கரைத்தது. அதிமுகவுக்கு மூன்றாவது தொடர் வெற்றி கிட்டுமா? என்கிற நம்பிக்கை சிலருக்கு ஏற்பட்டது. ஆனால் மாலை 3 மணிக்கு மேல் தான் திமுகவினருக்கே தாங்கள் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை உண்ணடானது.Edappadi who made Stalin drink water till the end ... DMK's eye-popping victory

அமமுக பிரிவு, தேமுதிக கூட்டணியில் இருந்து விலகல், உட்கட்சி பூசல், 10 ஆண்டுகால ஆட்சி என பல விஷயங்களை தாண்டி78 இடங்களில் வெற்றி பெற்றது அசாதாரணம்தான். இது எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையில் தோல்வி அல்ல என்றே பலரும் கருதுகின்றனர்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios