edappadi trying to meet modi for farmers
விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஒ.பி.எஸ் பிரதமரை சந்தித்து மனு அளித்து வந்தார். தொடர்ந்து தற்போது முதலமைச்சர் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், நதிநீர்களை இணைக்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறி தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் உறுதி அளித்திருந்தார்.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஒ.பி.எஸ் பிரதமர் மோடியை சந்தித்து விவசாயிகள் பிரச்சனைகளை எடுத்து கூறினார்.

மேலும் விவசாயிகள் சார்பில் அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் மோடியிடம் வழங்கினார்.
இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க விவசாயிகள் சென்னை வந்தனர். அப்போது முதலமைச்சர் ஊட்டி மலர் பூங்காவிற்கு சென்றதால் அவர்களுக்கு வேறு தேதியை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரம் கேட்டுள்ளார். வறட்சி நிவாரணம் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிரதமர் குஜராத் சென்றுள்ளதால் இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை என தெரிகிறது.
