வரும் சட்டமன்றத்தேர்தலில் அதிமுக எதிர்கட்சி வரிசையில் கூட அமரக்கூடாது என்றும் திமுக 24 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறக்கூடாது என்று அதிமுகவும் திட்டம் வகுத்து வருகின்றன.

வரும் சட்டமன்றத்தேர்தலில் அதிமுக எதிர்கட்சி வரிசையில் கூட அமரக்கூடாது என்றும் திமுக 24 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறக்கூடாது என்று அதிமுகவும் திட்டம் வகுத்து வருகின்றன.

2011ல் திமுக எதிர்கட்சியாகக்கூட வரவில்லை. அந்த நிலைமையை இப்போதும் ஏற்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார். 

அப்போது பேசிய அவர், ’’மு.க.ஸ்டாலினை எதிர்கட்சித்தலைவராகக் கூட வரவிடக்கூடாது. திமுகவிற்கு இந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கக்கூடாது. அதிமுகவின் வெற்றி உறுதி. திமுக மக்களை மதிக்காது. திமுக தனது தொண்டர்களைக்கூட மதிக்காது. திமுகவிற்கு எப்போதும் அவர்களின் குடும்பம்தான் முக்கியம். வாரிசு அரசியல் மீது மட்டுமே திமுக கவனம் செலுத்தும். 2011க்கு முன் இருந்த திமுக ஆட்சியில் ஒரு நல்ல விஷயம் கூட நடக்கவில்லை. 

அதனால்தான் திமுக அதை பற்றி பேசுவது இல்லை. திமுகவை ஆட்சிக்கு வர விடவே கூடாது. ஏன் திமுகவை எதிர்க்கட்சியாக ஆக கூட விட கூடாது. திமுகவிற்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். கண்டிப்பாக அதிமுகதான் மீண்டும் இந்த தேர்தலில் வெற்றிபெறும்’’ என்றார். 
கடந்த 2011 சட்டசபை தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட இழந்து மோசமான தோல்வியை தழுவியது. தேமுதிக அப்போது எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது.

இந்த வியூகத்திற்கு காரணம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 2011ல் ஜெயலலிதா படைத்த சாதனையை தற்போதும் நிகழ்த்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதாவது திமுகவை மொத்தமாக வீழ்த்தி எதிர்க்கட்சி கூட ஆக முடியாமல் செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் முதல்வர் பழனிசாமி இருக்கிறாராம். அதாவது 10% இடங்களுக்கு அதிகமாக திமுகவை வென்று விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அவர் இப்படி நினைக்க, திமுகவும் அதே திட்டத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். அதாவது, அதிமுகவை 23 இடங்களுக்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெல்ல விட வேண்டும். அப்படி செய்தால் சட்டசபையில் எதிர்க்கட்சியே இருக்காது. எதிர்க்கட்சி 234 இடங்களில் 24 இடங்களை வெல்லும் கட்சிதான் எதிர்க்கட்சியாக இருக்கும். இதனால், அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்க கூடாது என்ற திட்டத்தில் திமுகவும் சில திட்டங்களை வைத்துள்ளதாக கூறுகிறார்கள். ஆக மொத்தத்தில் இரு கட்சிகளும் வரிந்து கட்டி களத்தில் இறங்கி உள்ளன. போட்டியும் கடுமையாகவே உள்ளது. ஆனால், இந்த முறை 2011ல் ஏற்பட்ட நிலை இப்போது ஏற்படாது. அதாவது திமுக வெற்றி பெறாவிட்டாலும் எதிர்கட்சி அந்தஸ்தை பிடிக்கும். அதிமுக வெற்றி பெறாவிட்டாலும் எதிர்கட்சி நிலையை அடையும் என்பதே களநிலவரம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.