தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டிஜிட்டல் உரிமம் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக மக்கள் விரைவில் உலகத்தரம் வாய்ந்த சேனல்களை குறைந்த செலவில் பார்க்க வழிவகை செய்துள்ளது.

தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்குமாறு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பலமுறை மத்திய அரசை வலியுறுத்தினார்.  

இதனையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமரையும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவையும் ஜெயலலிதா நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

இந்நிலையில், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக மாநில அரசின் நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது இதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.