அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கும் தீர்மானத்தில் கையெழுத்திட 3 அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். 

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஒபிஎஸ் அணி பக்கம் தற்போது பலத்த காற்று வீசத்தொடங்கியுள்ளது. 

ஆட்சி கவிழாமல் இருக்க எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சி செய்து வருகிறார். இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே இரு அணிகள் ஒன்றாக இணையும் என ஒபிஎஸ் தரப்பு திட்டவட்டமாக கூறிவந்தது. 

ஆனால் எடப்பாடி தரப்பில் பல முட்டுக்கட்டைகள் விழுந்த வண்ணம் உள்ளன. மேலும், எடப்பாடி தரப்பு ஜெ மரணம் குறித்து நீதிவிசாரனை அமைக்கபடும் என்ற முதல் கோரிக்கைக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. 

சசிகலாவை நீக்குவதாக இன்னும் அறிவிக்கவில்லை எனவும், அறிவித்தால் மட்டுமே தலைமை கழகம் வருவோம் எனவும் ஒபிஎஸ் தரப்பு தெரிவித்தது. 

இதையடுத்து எடப்பாடி தரப்பில் அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சசிகலாவை அனைத்து அமைச்சர்களிடமும் தீர்மானத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது. 

ஆனால் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, ஒ.எஸ்.மணியன், செல்லூர் ராஜு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து மறுப்பு தெரிவித்தனர். 
இதனால் அணிகள் இணைப்பில் இழுப்பறி நிலவி வருகிறது.