துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கையா நாயுடுவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விமானம் மூலம் டெல்லி சென்றார்.

அங்கு நீட் தேர்வு குறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இன்று வலியுறுத்தினார். பின்னர், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து நீட் தேர்வு குறித்து கலந்தாலோசித்தார்.

பின்னர், துணை குடியரசு தலைவர் பதவிக்கு பாஜக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கையா நாயுடுவை முதலமைச்சர் எடப்பாடியும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், வெங்கையா நாயுடுவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி, ஜெயலலதாவிடம் தனி மதிப்பு பெற்றவர் வெங்கையா நாயுடு எனவும், தமிழகத்தின் நலனில் அக்கறை கொண்டவர் எனவும், புகழாரம் சூட்டினார்.

மேலும் துணை குடியரசு தலைவர் தேர்தலில் வெங்கையா நாயுடுவிற்கு ஆதரவு தருவதாக எடப்பாடி தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய வெங்கையா நாயுடு ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.