இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு பக்காவாக தேர்தல் வியூகம் அமைத்துக்கொடுக்கும் பிகே எனும் பிரசாந்த் கிஷோருடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்திவரும் தகவல் அறிந்த எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சியில் உள்ளாராம்.

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடிக்கு தேர்தல் ஆலோசனைக்கு கொடுத்தது.  அடுத்து, 2015 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதீஷ் குமாரை ப்ரமோட் செய்து. நிதீஷ் குமாரை  ஆட்சி அமைக்கவைத்தது. இதனைத் தொடர்ந்து, ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஜெயித்தார் ஆனால் இதற்க்கு நான்கு வருடத்திற்கு முன்பே போட்டு கொடுத்த பிளானை பக்காவாக இம்ப்லீமென்ட் செய்து வெற்றி பெற்றுள்ளார். 

அடுத்ததாக, மேற்குவங்காளத்தில் அடுத்து வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக மம்தா பானர்ஜிக்காக தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்துள்ளா பிரசாந்த் கிஷோரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில், தமிழகத்தில் செல்வாக்கு சரிந்து கிடக்கும் அதிமுகவை, வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக இருந்துள்ளது.  இந்த மெகா புராஜெக்ட்டுக்காக சுமார் 500 பேர் ஊழியர்கள் வேலை வேலை பார்ப்பார்கள், அதற்காக எடப்பாடியிடம் ரூ.150 கோடி பில் கொடுத்துள்ளார். 

எடப்பாடியின் இந்த மெகா பிளானை தெரிந்த பன்னீர் டீம் சில காரணங்களை சொல்லி பிகேவுடனான புராஜெக்ட்டை கைவிடும்படி நச்சரித்து வருகிறது.  இந்த நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், 22 சட்டசபை தேர்தலிலும் தனித்து களமிறங்கிய கமலின் மக்கள் நீதி மய்யம், 16 லட்சம் வாக்குகளை அள்ளியது. 12 இடங்களில் 3-ஆவது இடத்தை பிடித்தது. அதுமட்டுமல்ல, பாமக தேமுதிக கட்சிகளை வீழ்த்தி தள்ளியது.

நாங்க தோற்றாலும்  கவுரவமாக தொற்றுள்ளோம் என எண்ணிய கமல்ஹாசன், அடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் மீண்டும் தனித்தே போட்டியிட பிளான் போட்டுள்ளது திட்டமிட்டுள்ளது. கடந்த தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு வந்த தங்கச்சி இந்த முறை ஜெயிக்க வேண்டும் என நினைக்கும் அவர், உள்ளாட்சி தேர்தலிலும் வரும் 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் வியூகம் வகுத்து தருவது குறித்து தேர்தல் வியூக மன்னன் பிகேவை வரவழைத்த கமல், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில்  தீவிர ஆலோசனை ஆலோசனை நடத்தி வருகிறார். 

இந்த தகவலை அறிந்த எடப்பாடி பழனிச்சாமி, நமக்கு பில் கொடுத்துவிட்டு இப்படி கமலுக்கு ஐடியா கொடுக்க ஆழ்வார்பேட்டைக்கு போயிருக்கிறாரே இந்த பிகே என, பிகேவை அறிமுகப்படுத்தியவர்களிடம் போன்போட்டு புலம்பித்தள்ளியுள்ளாராம். 

ஒரே நேரத்தில் பல்வேறு கட்சிகளுக்கு அக்ரிமெண்ட் போட்டு பாகுபாடின்றி பல கட்சிகளுக்கு பக்கா பிளான் போட்டுத் தருவதில் இன்டலிஜெண்ட் தான், அதற்காக ஒரே மாநிலத்தில் எத்தனைப்பேருக்குத்தான் ஐடியா கொடுப்பாரு? என குழம்பிப்போயுள்ளாராம். இதில் ஹைலைட் என்னன்னா? ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நண்பன் தன் இந்த பிகே, அதுமட்டுமல்ல,  திமுகவிற்கு தேர்தல் வியூரோகம் அமைத்துக்கொடுக்கும் ஓஎம்ஜி நிறுவனமும் இவருடையது தான். நமக்கு நாமே என்ற ஸ்டாலினின் மாஸ் திட்டமும்  இவரோட திட்டம் தான்.