edappadi replies to stalin in assembly
தமிழகத்தில் தான் குற்றம் அதிகம் நடைபெற்று வருவதாக ஸ்டாலின் எழுப்பிய குற்றசாட்டிற்கு பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி குற்றம் நடக்காத நாடும் மாநிலமும் இல்லை என தெரிவித்தார்.
சட்டபேரவையில் காவல்துறை குறைத்த மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் போராடும் மக்களை அடிப்பது தான் ஜனநாயகமா? எனவும் குற்ற வழக்கு விவரங்களை முழுமையாக தேசிய ஆவண காப்பகத்திற்கு வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களை வழங்கியிருந்தால், இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்திருக்கும் எனவும், புகாரை பதிவு செய்ய மறுக்கும் அதிகாரிகள், அதிகம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது காவல் நிலையங்களில் வழக்கு உள்ளதாகவும், மூத்த அதிகாரிகள் இரண்டு பேர் இருக்கும் போது டிஜிபியாக ராஜேந்திரனை எப்படி நியமிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குற்றம் நடக்காத நாடும் மாநிலமும் இல்லை என தெரிவித்தார்.
மேலும், குற்றம் நடக்காமல் தடுப்பதுதான் அரசின் கடமை எனவும், டிஜிபி பணிநீட்டிப்பு முறைப்படியே நடைபெற்றுள்ளது எனவும் தெரிவித்தார்.
மத்திய அனுப்பிய 5 பேர் பட்டியலில் இருந்து ஒருவரை தான் டிஜிபியாக நியமித்தோம் எனவும், முதல்வர் பதிலளித்தார்.
