30 thousand fishermen affected by the oil spill in the interim relief Edappadi Palanichamy

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாயை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

சென்னை எண்ணூர் துறைமுகம் கடல் பகுதியில் இரண்டு சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 150 டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. 

நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின் எண்ணெய் படலம் அப்புறப்படுத்தப்பட்டாலும், மீன்பிடி தொழிலை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இவ்விபத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் மீனவர்களுக்கு கருணை அடிப்படையில் தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி தமிழக அரசால் இன்று வழங்கப்பட்டது.

ஆர்.கே. நகரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மீனவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை தொகை வழங்கினார்.