மின்மினிப்பூச்சி, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் தராது..! மக்களை ஏமாற்றும் பட்ஜெட்- இபிஎஸ் விளாசல்

மகளிர் உரிமைத்தொகை அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. தற்போது   தகுதி வாய்ந்தவர்களுக்கு தான் என்கிறார்கள், என்ன அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்கிறீர்கள் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Edappadi Palaniswami has criticized the Tamil Nadu budget as a firefly

தமிழக பட்ஜெட் தாக்கல்

சட்டப்பேரவையில் இன்று  2023 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் தமிழக அரசை கண்டிக்கும் வகையில் சட்டப்பேரவையை அதிமுக புறக்கணித்தது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி சொத்துவரி குடிநீர் வரி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பு,  அதிமுகவினர் மீது பொய் வழக்கு, பிளஸ் டூ தேர்வில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதாமல் கல்வி வளர்ச்சியில் பின்னடைவு, விவசாயிகள் நெல்கொள்முதல் முறையாக நடத்தாதது, நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் கிராம மக்கள் அனுமதி பெறாமல் நிலம் எடுக்கப்படுவதை கண்டித்தும் வெளி நடப்பு செய்ததாக கூறினார்.

மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய்..! செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும்- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Edappadi Palaniswami has criticized the Tamil Nadu budget as a firefly

விலை உயர்வு - மக்களுக்கான பரிசு

தொடர்ந்து பேசிய அவர், மின்கட்டணம், பால்விலை உயர்வு மக்களுக்கு கிடைத்த பரிசு எனவும் விமர்சித்தார்.  பெட்ரோல் டீசல் வரி வருவாய் உயர்ந்துள்ள நிலையில் வருவாய் பற்றாக்குறை குறையாமல் உள்ளது. வருவாய் பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருந்திருக்க வேண்டும் என கூறினார். அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் 15 மாதங்கள் தொழிற்சாலை மூடப்பட்டது. வரிவருவாய் இல்லை. செலவு அதிகரித்தது. கொரோனா தொற்றை தடுக்க மருத்துவ செலவு அதிகரித்ததாக கூறினார். திமுக ஆட்சியில் கொரோனா குறைந்தது. வரிவருவாய் அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் வரிவருவாய் குறைந்தது. ஆனால் திமுக ஆட்சியில் வரிவருவாய் அதிகரித்துள்ளது. 

Edappadi Palaniswami has criticized the Tamil Nadu budget as a firefly

மின்மினி பூச்சி- பட்ஜெட்

நீட் தேர்வு ரத்து என்றார்கள் உதயநிதி சட்டப்போராட்டம் நடத்துவதாக சொல்கிறார். அவருக்கு நோபல்பரிசு கொடுக்கலாம். எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ஆதிதிராவிட மக்களுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிதி குறைக்கப்பட்டுள்ளது.  தினந்தோறும் கொலை கொள்ளை நடக்கிறது. சட்டம் ஒழுங்கு மோசமான இருக்கிறது. பாலியல் வன் கொடுமை தொடர்கிறது. போதை பொருள் விற்பனை தொடர்கிறது. மகளிர் உரிமைத்தொகை அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையாக ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் இப்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு தான் என்கிறார்கள். என்ன அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்கிறீர்கள் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறுகிறது என தெரியுமா..? சபாநாயகர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios