இந்தியாவிலேயே ஷூ போட்டுக் கொண்டு ஏர் உழுதவர் ஸ்டாலின் தான். செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றார் என்று ஸ்டாலினை காரசாரமாக கலாய்த்துள்ளார் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி.

திருப்பரங்குன்றம்  சட்டமன்ற இடைத்தேர்தலின் அ.தி.மு.க., வேட்பாளரான முனியாண்டியை ஆதரித்து பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி;  கடந்த 2 முறையும் நாம் தான் வெற்றிபெற்றுள்ளோம். இனியும் நாம் தான் வெற்றி காண்போம். திருப்பரங்குன்றம்  அதிமுகவின் கோட்டையாக விளங்குகிறது. இதில் வேறு நபர்கள் நுழையாமல் பாதுகாப்பது தொண்டர்களான உங்களின் கடமை.  இந்தியாவிலேயே 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கிவருவது தற்போதைய அதிமுக அரசு மட்டும் தான். 

திருப்பரங்குன்றம் தொகுதியில் பல வேலை வாய்ப்புகளை இந்த அரசு உருவாக்கிக்கொடுத்துள்ளது. மேலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஸ்டாலின் 25 வயது இளைஞர் போல், செல்லும் இடங்களில் கறுத்து போய் விட்டேன் என்று பச்சை பச்சையாக பொய் சொல்லி  வருகின்றார். இந்த மாதிரி நம்ம புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கூட சொன்னது இல்லை, இவர் இங்கு கோமாளியாக வேஷம் போட்டு சுற்றி வருகின்றார். இந்தியாவிலேயே ஷூ போட்டுக் கொண்டு ஏர் உழுதவர் ஸ்டாலின் தான் என்று பேசினார்.