Asianet News TamilAsianet News Tamil

கொதறிய கொரோனாவால் தடுமாறும் தமிழகம்.. அவசர அவசரமாக ஆளுநரை சந்திக்கும் முதல்வர் எடப்பாடி..!

தமிழகம் கொரோனாவால் சிக்கி தவித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார். 

Edappadi Palanisamy to meet tamilnadu Governor Banwarilal Purohit Today
Author
Chennai, First Published May 4, 2020, 3:14 PM IST

தமிழகம் கொரோனாவால் சிக்கி தவித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார். 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,023ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,379 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவரின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை சென்னையில் 1,458 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து 100ஆக இருந்து வருகிறது.  

Edappadi Palanisamy to meet tamilnadu Governor Banwarilal Purohit Today

தமிழகத்தில் இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுரை சந்தித்து விளக்கமளிக்க உள்ளார். கடந்த மாதம் கூட தமிழகத்தில் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அனைத்து விவரங்களையும் முதல்வர் ஆளுநரிடம் எடுத்துரைத்தார். 

Edappadi Palanisamy to meet tamilnadu Governor Banwarilal Purohit Today

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தேவைப்படக் கூடிய பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்ட அனைத்தும்  போதுமான அளவில் உள்ளதா என்ற தகவலையும், தமிழக ஆளுநர் முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிவார் என்று கூறப்படுகிறது. அதேபோல், மத்திய அரசு தமிழகத்துக்கு தற்போது வரை குறைவான நிதியே ஒதுக்கப்பட்ட  இந்த சூழ்நிலையில், மத்திய அரசிடம் போதுமான நிதியை ஒதுக்க பரிந்துரை செய்ய வேண்டும் ஆளுநர் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முதல்வர் வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios