Asianet News TamilAsianet News Tamil

முறைகேடு அவருக்கு தெரியும்.. முதல்ல எடப்பாடி பழனிச்சாமியை விசாரிங்க.. அலறவிடும் திமுக கூட்டணி கட்சி.!

இரு தினங்களுக்கு முன்பு அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

Edappadi palanisamy to be investigated.. mutharasan
Author
Tamil Nadu, First Published Nov 29, 2021, 10:26 AM IST

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தெரியாமல் முறைகேடு நடந்திருக்க முடியாது. எனவே, இந்த வழக்கில் அவரையும் விசாரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களின் உதவியாளர்களாக இருந்தவர்கள் மீது நிறைய மோசடி வழக்குகள் உள்ளன. இரு தினங்களுக்கு முன்புகூட ரூ.1 கோடி மதிப்புள்ள முந்திரி லோடு ஏற்றி வந்த லாரியை கடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Edappadi palanisamy to be investigated.. mutharasan

அதேபோல முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் போல், வேறு சில அமைச்சர்களின் உதவியாளர்களும் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு இல்லாமல் அவருடைய உதவியாளர், அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்திருக்க வாய்ப்பே இல்லை. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தெரியாமல் முறைகேடு நடந்திருக்க முடியாது. எனவே, இந்த வழக்கில் அவரையும் விசாரிக்க வேண்டும்.

Edappadi palanisamy to be investigated.. mutharasan

மேலும் அவர் கூறுகையில், “சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, ஆளுநர்கள் காலதாமதம் இல்லாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு ரத்து தீர்மானத்தை, விரைந்து அனுப்ப தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து கோரியுள்ளார். நீட் மசோதா மட்டும் அல்ல, எந்தச் சட்ட மசோதாவாக இருந்தாலும், அதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும். தமிழகத்தில் பெய்துவரும் தொடர் மழையால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கேட்டுள்ள ரூ.4000 கோடி வெள்ள நிவாரண நிதியை, மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.” என்று முத்தரசன் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios