திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் சென்றிருந்தார், அவர் அங்கு சென்ற நேரம் தமிழகத்தில் மழை கொட்டோ கொட்டுனு கொட்டி தமிகத்தில் உள்ள அணைகள் எல்லாம் நிரம்பின. இப்போ அவர் திரும்பி வந்ததும் எல்லாமே நின்றுவிட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்தார்.

அண்மையில் திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் சென்றிருந்தார். அங்கு அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார். இதையடுத்து லண்டனில் நடைபெற்ற டென்னிஸ் போட்டிகளையும் கண்டு ரசித்தார். மேலும் தனது மருமகன் சபரீசன் பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்று வாழ்த்தினார்.

அவர் லண்டன் சென்றிருந்த நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மற்றுளும் நெல்லை மாவட்டங்களில் உள்ள பல அணைகள் நிரம்பின. இந்நிலையில் ஸ்டாலின் இன்று அதிகாலை லண்டனில் இருந்து சென்னை திருப்பினார்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  ஸ்டாலின் லண்டன் சென்றதும் நன்றாக மழை பெய்து தமிழக அணைகள் நிரம்பி விட்டன. அவர் தமிழகம் திரும்பியதும் மழை நின்று விட்டது என தெரிவித்தார்.

ஸ்டாலின் தமிழகத்தை விட்டு வெளியே சென்றால் இங்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் எடப்பாடி கிண்டல் செய்துள்ளார்