ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் இவர்கள் மைக் முன்பாக நின்று இந்த அளவிற்கு பேசுவார்களா என நினைத்தவர்கள் வாயடைத்துப் போகும் அளவிற்கு பட்டையை கிளப்புகிறார்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் பேச்சுத் திறமைக்கு புகழ்பெற்ற கருணாநிதியின் லெவலுக்கு எடப்பாடி எகிறி அடிக்கிறார் என்பதுதான். குறிப்பாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு சமயோசிதமாக பதில், சொல்வதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதிதான் என்பார்கள்.

ஆனால், பல பட்டப் பெயர்களை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்து எடப்பாடியை கிண்டல் செய்தவர்களுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது எடப்பாடி பழனிச்சாமியின் சமீபகால பேச்சுக்கள்.  திமுக தலைவர் ஸ்டாலின் ஆகட்டும், காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் ஆகட்டும் அவர்களுக்கு எதிரான கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது தெளிவான சிந்தனையோடு அதேநேரத்தில் மிக ஆழமான அதிர்ச்சியளிக்கக் கூடிய வார்த்தைகளைப் போட்டு பதிலாக அளித்து விடுகிறார்.

இதைப் புரிந்து கொள்வதற்கு அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு கூட சில நிமிடங்கள் ஆகி விடுகிறது. ஸ்டாலினின் ஊட்டி விஜயத்தை பற்றிக் கூறும்போது அவர் என்ன "சும்மா சீன் போட்டு விட்டு போய் விடுவார்" வேலை எல்லாம் நாங்க தானே செய்கிறோம் என எதார்த்தத்தை எளிமையான லாங்குவேஜில் பட்டென போட்டு உடைத்துவிட்டார். அதேபோன்று சிதம்பரத்தின் குற்றச்சாட்டுக்கு சட்டென கோபமான எடப்பாடி பூமிக்கு பாரமாக உள்ளவர் என தெரிவித்து விட்டார்.

தான் சொன்னது மிகப் பெரிய வார்த்தை என்பதை உடனே புரிந்துகொண்ட, எடப்பாடி சிதம்பரம் காவிரி விஷயத்தில் என்ன செய்தார் பாலாறு விஷயத்தில் என்ன செய்தா? முல்லைப் பெரியாறு விஷயத்தில் என்ன செய்தார்? ஹைட்ரோகார்பன் விஷயத்தில் என்ன செய்தார்? ஸ்டெர்லைட் விஷயத்தில் என்ன செய்தார்? நீட்டின விஷயத்தில் என்ன செய்தார்? தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்தார்? அவரது சொந்த மாவட்டத்திற்கு என்ன செய்தார்? என சமயோஜிதமாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி பத்திரிக்கையாளர்களை நிலைகுலையச் செய்தார்.

 எடப்பாடியின் சமீபகால இந்த பேச்சுக்கள் பத்திரிக்கையாளர்களை மட்டுமின்றி முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை ஆச்சரியம் அடைய செய்துள்ளதாம். பதவியேற்ற இரண்டு வருடத்திற்கு உள்ளாகவே எடப்பாடி பழனிச்சாமி, கைதேர்ந்த மிகப்பெரிய அரசியல் தலைவராக உருவெடுத்துள்ள இது காட்டுகிறது என தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

காரணம் தமிழகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு பிறகு வைகோ, ஈவிகேஎஸ் இளங்கோவன், தினகரன் ஆகியோர் மட்டுமே ஹைலைட் இல் இருந்து வந்தனர் ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பட்டையை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.