ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போனதற்கு முதலமைச்சர் ஓபிஎஸ் தரப்பு வகுத்த தீர்க்கமான வியூகம் தான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. அதுவும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே தேனி தொகுதியில் வெற்றி வாகை சூடினார். அதேசமயம் தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட இடைத்தேர்தல் நடைபெற்ற ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் தொகுதிகளில் அதிமுக தோல்வி அடைந்தது. 

எம்.பி. பதவியை மகனுக்கு வெற்றி பெற்றும் கொடுத்த ஓபிஎஸ் இடைத் தேர்தல் தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் தோல்வி அடைந்தது எடப்பாடி தரப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இடைத்தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் தமிழகத்தில் ஆட்சி நீடிக்காது என்பது தெரிந்தும் 2 தொகுதிகளை திமுகவிடம் எடப்பாடி உள் நோக்கத்துடன் தான் தாரை வார்த்து உள்ளார் என்றும் ஒரு பேச்சு எழுந்தது. 

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஓபிஎஸ் சார்ந்த சமுதாய அதிமுக நிர்வாகிகள் அவரது பின்னால் அணிவகுக்க ஆரம்பித்தனர். இதைப்போல் பாஜக மேலிடமும் ஓபிஎஸ்-க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது. இதனால் அதிமுகவில் ஓபிஎஸ் கை ஓங்குவதும் எடப்பாடியின் கை இறங்குவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தான் மத்திய அமைச்சரவையில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் இணைவார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. 

மகளுக்கு மத்திய அமைச்சர் பதவியை மட்டும் ஓபிஎஸ் வாங்கிக் கொடுத்து விட்டார் என்றால் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அவரது செல்வாக்கு அதிகரித்து விடும் என்று நம்பிய எடப்பாடி தரப்பு உடனடியாக அதனை தடுத்து நிறுத்த களமிறங்கியது. வழக்கம்போல் இந்த அசைன்மென்ட் எடப்பாடியின் இரண்டு கலங்கலாக இருக்கும் அந்த அமைச்சர்களிடம் தான் கொடுக்கப்பட்டது. 

இந்த விவகாரத்தில் ஓபிஎஸ்ஐ பலவீனப் படுத்த வேண்டும் என்றால் அவருக்கு எதிராக அவரது சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த வேண்டும் என்றுதான் வைத்தியலிங்கத்தை தேர்வு செய்துள்ளது எடப்பாடி தரப்பு. இதனைத் தொடர்ந்து அந்த அமைச்சர்கள் 2 பேரும் வைத்திய லிங்கத்திற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று தங்கள் டெல்லி தொடர்புகளை முடுக்கி விட்டுள்ளனர். இதனால் பாஜக மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு பக்கம் தீவிர விசுவாசி ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்க மறுபுறம் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை வைத்திருக்கும் எடப்பாடி தரப்பு வைத்தியலிங்கத்திற்கு மத்திய அமைச்சர் பதவியை கேட்டு வலியுறுத்தியுள்ளது. 

இதனால் இரண்டு தரப்பையுமே அதிருப்திக்கு ஆளாக வேண்டாம் என்று ரவீந்திரநாத் பெயரை அமைச்சரவை பட்டியலிலிருந்து நீக்கியுள்ளார் அமித் ஷா. பெற்று மோடியுடன் சேர்த்து மொத்தமாக 60 பேர் பதவி ஏற்பதாக இருந்தது. ஆனால் ஐக்கிய ஜனதா தளம் கடைசி நேரத்தில் ஒரே ஒரு கேபினட் அமைச்சர் பதவியை ஏற்க்க முடியாது என்று கூறி வெளியேறிவிட்டது. இதைப்போல் ரவீந்திரநாத் குமார் பெயரும் நீக்கப்பட்டு விட்டது. இதனால்தான் நேற்று 58 பேர் மட்டுமே பதவி ஏற்றுள்ளனர்.