மு.க.ஸ்டாலின், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த நிதியினை, நிர்வாகம் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் மருத்துவ கருவிகள் வாங்க திமுக எம்எல்ஏக்கள் நிதியுதவி தந்து வருகின்றனர். அந்த அடிப்படையில், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் 1.03 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.

அதில், அதிகபட்சமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தார். அதாவது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 50 வெண்டிலேட்டர்கள் தேவைப்படும் நிலையில் அதில் 10 வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்காக 60 லட்சத்தை ஒதுக்குவதாக மார்ச் 27ஆம் தேதி கரூர் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

முதலில் இந்த நிதியை ஏற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகம், பிறகு மறுத்துவிட்டது. இதற்கான மெயில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் செந்தில்பாலாஜிக்கு சென்றுள்ளது. அதில், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும்தான் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.. திமுக வட்டாரத்தில் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, ’அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனிக்க வேண்டும்’’ என  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘’தெரியாமல் குறை கூறியுள்ளார் ஸ்டாலின்.

எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த நிதியினை, நிர்வாகம் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும், அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று என்றும், இப்பிரச்சனையில் முதலமைச்சர் கவனிக்கவும் என்றும் பதிவிட்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வழிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான், சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின்படி, வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதை அறியாமல், எதிர்கட்சித் தலைவர் டிவிட்டரில் விதிமுறைகளின்படி செய்ததை குறை கூறியுள்ளார். ஏற்கனவே கொரோனா தொற்றுநோய் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு, அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் ரூ.25 இலட்சம் அந்தந்த தொகுதியில் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க மாவட்ட மற்றும் மாநில அளவில், மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயினை, மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு பயன்படுத்திக்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.