எந்த ஒரு உண்மையான அதிமுக தொண்டரையும் தொட்டுப் பார்க்க முடியாது என ஸ்டாலினுக்கு நெத்தியடி பதிலளித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தினகரன் கட்சியிலிருந்து திமுகவுக்கு தங்க தமிழ்செல்வன் தலைமையில் அமமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா தேனி அருகே வீரபாண்டியில் நடைபெற்றது. 

இந்த விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், இங்கு வந்து சேர்ந்து இருக்கக்கூடிய தங்க தமிழ்ச்செல்வனை மட்டுமல்ல, உங்களை மட்டுமல்ல உண்மையாக அதிமுகவிற்காக இன்றைக்கும் உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த உண்மை விசுவாசிகள் தொண்டர்கள் அதிமுகவில் இருப்பது நியாயமல்ல, நீங்க இருக்கவேண்டிய இடம், உங்களுடைய இயக்கம் தாய்க்கழகம் திராவிட இயக்கமாக இருக்கக்கூடிய திமுக தான். அவங்களையும் நான் வருக, வருக, வருக என வரவேற்கிறேன். 

இதற்கு சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நாங்க சொல்லுகிறோம். உண்மையான அண்ணா தலைமையில் உள்ள திமுக தொண்டர்கள் அத்தனை பேரும் அதிமுகவில் வந்து இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பம் உள்ளது. 

இந்நிலையில், இன்று ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எந்த ஒரு உண்மையான அதிமுக தொண்டரையும் தொட்டுப் பார்க்க முடியாது என ஸ்டாலினுக்கு நெத்தியடி  பதில் கொடுத்துள்ளார்.